வெனிசுவேலா |
Bolivarian Republic of Venezuela வெனிசுவேலா República Bolivariana de Venezuela | ||||||
---|---|---|---|---|---|---|
| ||||||
குறிக்கோள்: Dios y Federacion கடவுளும் கூட்டாட்சியும் | ||||||
நாட்டுப்பண்: Gloria al Bravo Pueblo வீரமுள்ள மக்களுக்கு புகழ் | ||||||
தலைநகரம் | கராகஸ் 10°30′N 66°58′W / | |||||
பெரிய நகர் | தலைநகர் | |||||
மக்கள் | வெனிசுவேலர் | |||||
அரசாங்கம் | சனாதிபதிக் குடியரசு | |||||
• | சனாதிபதி | |||||
விடுதலை | ||||||
• | ||||||
• | கிரான் கொலம்பியாவிடம் இருந்து | |||||
• | அங்கீகாரம் | |||||
பரப்பு | ||||||
• | மொத்தம் | 9,16,445 கிமீ2 ( 3,53,841 சதுர மைல் | ||||
• | நீர் (%) | 0.32 | ||||
மக்கள் தொகை | ||||||
• | 28,199,822 ( | |||||
• | 2001 கணக்கெடுப்பு | 23,054,210 | ||||
• | அடர்த்தி | 30.2/km2 ( 77/sq mi | ||||
| 2007 கணக்கெடுப்பு | |||||
• | மொத்தம் | $335 பில்லியன் ( | ||||
• | தலைவிகிதம் | $12,800 ( | ||||
44.1 மத்திமம் | ||||||
▲ 0.792 Error: Invalid HDI value · | ||||||
நாணயம் | வெலெசுவேலாவின் பொலிவார் ( | |||||
நேர வலயம் | UTC-4 | |||||
அழைப்புக்குறி | 58 | |||||
இணையக் குறி | .ve |
வெனிசுவேலா (Venezuela,
வெனிசுலா என அழைக்கப்படும் இப்பகுதியில் பூர்வகுடி மக்களின் எதிர்புக்கு இடையில் ஸ்பெயினில் இருந்து 1522 ஆம் ஆண்டில் மக்கள் குடியேறி ஸ்பெயினின் குடியேற்ற நாடாக ஆனது. 1811 ஆம் ஆண்டில், தனது சுதந்திரத்தை அறிவித்த முதல் ஸ்பானிய அமெரிக்க காலனிகளில் இதுவும் ஒன்றாகும், என்றாலும் அதன்பிறகு வெனிசுலா கொலம்பியாவின் கூட்டாட்சி குடியரசின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் 1830 ஆம் ஆண்டு ஒரு தனி நாடாக முழு சுதந்திரம் பெற்றது. 19 ம் நூற்றாண்டில், வெனிசுலா அரசியல் கொந்தளிப்பு மற்றும் சர்வாதிகாரத்தை அனுபவித்தது, 20 ஆம் நூற்றாண்டின் மத்தியப்பகுதி வரை பிராந்திய படைத்தளபதிகளான செடில்லோஸ் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. 1958 முதல், நாடு ஒரு தொடர்ச்சியான ஜனநாயக அரசாங்கங்களைக் கொண்டுள்ளது. 1980 கள் மற்றும் 1990 களில் ஏற்பட்ட பொருளாதார அதிர்ச்சி பல அரசியல் நெருக்கடிகளுக்கு வழிவகுத்தது, 1989 இன் கொடிய கராகசோ கலவரங்கள் உட்பட நிகழ்வுகள் நடந்தன. 1998 இல்
வெனிசுலா ஒரு கூட்டாட்சி குடியரசு குடியரசு ஆகும், இதில் 23 மாநிலங்கள், தலைநகர் மாவட்டம் (தலைநகர ஆட்சிப்பகுதி) மற்றும் ஒன்றிய ஆட்சிப்பகுதிகள் (வெனிசுலாவைச் சேர்ந்த கடல் தீவுகளை உள்ளடக்கியது). வெனிசுலாவானது இஸகிபோ ஆற்றின் மேற்குப் பகுதியில் 159,500-சதுர கிலோமீட்டர் (61,583 சதுர மைல்) பரப்பளவிலான எல்லா கயானா பிரதேசங்களையும் உரிமை கோருகிறது.[2] லத்தீன் அமெரிக்காவில் மிகவும் நகரமயமாக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக வெனிசுலா உள்ளது; [3][4] வெனிசுலாவின் பெரும்பான்மையானவர்கள் வடக்கே உள்ள நகரங்களில் வசிக்கிறார்கள், குறிப்பாக வெனிசுலாவிலுள்ள மிகப்பெரிய நகரமாக இருக்கும் தலைநகரான
வெனிசுலாவில் எண்ணெய் வளமானது 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது, வெனிசுலா உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களைக் கொண்டிருக்கிறது மேலும் உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளர்களில் ஒருவராக உள்ளது. முன்பு காபி மற்றும் கோகோ போன்ற விவசாயப் பொருட்களே நாட்டின் ஏற்றுமதியில் முதன்மை பங்கு வகித்தன, அதன்பிறகான காலகட்டத்தில் எண்ணெய் ஏற்றுமதியே அரசாங்க வருவாய்களில் ஆதிக்கம் செலுத்தியது. 1980 களில் ஏற்பட்ட எண்ணெய் விலை வீழ்ச்சியானது நாட்டின் வெளிப்புற கடன் நெருக்கடிக்கு வழிவகுத்தது, நீண்டகால பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது, இதில் பணவீக்கம் 1996 ல் 100% உயர்ந்து, 1995 இல் வறுமை விகிதம் 66% ஆக உயர்ந்தது [5] (1998 க்குளான காலம்) தனிநபர் வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1963 இல் இருந்த நிலைக்கு சரிந்தது, இது அதன் 1978 உச்சகட்ட காலத்தில் இருந்ததில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். [6] 2000 களின் முற்பகுதியில் எண்ணெய் விலை மீட்பு அடைந்தபோதும் 1980 களில் இருந்து வெனிசூலா எண்ணெய் வருவாய் அளவை அடையவில்லை. [7] வெனிசுலா அரசாங்கம் பின்னர் வெனிசுலாவின் பொருளாதாரத்தை வளர்த்தது, சமூக செலவினங்களை அதிகரித்து, பொருளாதார சமத்துவமின்மை மற்றும் வறுமை ஆகியவற்றை கணிசமாக குறைத்தது. [7][8][9][10] இருப்பினும், அத்தகைய கொள்கைகள் பின்னர் நாட்டின் பொருளாதாரத்தை நிலையில்லா தன்மைக்கு உட்படுத்தியதால் சர்ச்சைக்குரியதாக ஆனது, இதன் விளைவாக அதிகப்படியான பணவீக்கம், பொருளாதார மந்தநிலை மற்றும் வறுமை நிலை கடுமையாக அதிகரிப்பு ஆகியவை ஏற்பட்டன. [11][7][12][13][14][15][16]