விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை

Green check.pngஇது தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் வருகின்றது. இந்தக் கொள்கைக்குப் பயனர்களின் பரவலான ஒப்புதல் உண்டு. இந்தக் கொள்கையையும் வழிகாட்டல்களையும் அனைவரும் மதித்து செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. புதுக் கருத்துக்களையும், மாற்றுக் கருத்துகளையும் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கலாம். குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவதாக இருந்தால், அந்த மாற்றங்களை நோக்கி இணக்க முடிவை எட்டிய பின்னர் ஏற்படுத்தவும்.


தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள்

ஐந்து தூண்கள்
தமிழ் விக்கிப்பீடியா எவை அல்ல
விதிகளை மீறு
கொள்கைகளும் வழிகாட்டல்களும்
பதிப்புரிமை

தமிழ் விக்கிபீடியாவின் உள்ளடக்கம்

நடுநிலை நோக்கு
மெய்யறிதன்மை
மேற்கோள் சுட்டுதல்
கிரந்த எழுத்துப் பயன்பாடு
கேள்விக்குட்படுத்தல்
புத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும்
படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்
வெளி இணைப்புகள்
வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு
தன்வரலாறு
கைப்பாவை
தானியங்கித் தமிழாக்கம்
தரவுத்தள கட்டுரைகள்
கட்டுரை ஒன்றிணைப்பு
தணிக்கை

தமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல்

கண்ணியம்
இணக்க முடிவு
பாதுகாப்புக் கொள்கை
ஒழுங்குப் பிறழ்வுகள்
விக்கி நற்பழக்கவழக்கங்கள்
தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்
விசமிகளை எதிர்கொள்வது எப்படி?

நடைமுறையில் `மெய்யறிதன்மை`க் கொள்கை

  1. கட்டுரைகள், நம்பத்தகுந்தவர்களால், பதிப்பிக்கப்பட்ட ஆதாரங்களை மேற்கோள் காட்டி, அமைதல் வேண்டும்.
  2. புதிய உள்ளடக்கங்களைச் சேர்க்கும் தொகுப்பாளர்கள், நம்பத்தகுந்த மூலங்களைச் சான்று காட்டவேண்டும். இல்லையேல், வேறு தொகுப்பாளர்கள் இதன் நம்பகத்தன்மை பற்றிக் கேள்வியெழுப்பவோ, அப்பகுதியை நீக்கிவிடவோ கூடும்.
  3. சான்று காட்டவேண்டிய பொறுப்பு, குறித்த பகுதியைத் தொகுத்தவருக்கே உரியது, அதனை நீக்க விரும்புபவருக்கு அல்ல.


விக்கிப்பீடியாவில் சேர்ப்பதற்கான அடிப்படை 'உண்மையை விட மெய்யறிதன்மையே. "மெய்யறிதல்" என்று இங்கு குறிப்பிடப்படுவது, விக்கிப்பீடியாவில் பதிக்கப்பட்டுள்ள தகவலை எந்தவொரு வாசகரும் முன்னரே அச்சில் உள்ள ஓர் நம்பகமான மூலங்கள் மூலம் சரிபார்த்துக்கொள்ள இயலுவதாகும். தொகுப்பாளர்கள் கேள்வியெழுப்பப்பட்ட (கேள்வி எழக்கூடிய) பகுதிகளுக்கு நம்பகமான மூலங்களைச் சான்றாகக் காட்ட வேண்டும்.

விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை விக்கிப்பீடியாவின் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தும் மூன்று கொள்கைகளில் ஒன்றாகும். மற்ற இரண்டு கொள்கைகள் சொந்த ஆய்வு கூடாது மற்றும் விக்கிப்பீடியா:நடுநிலை நோக்கு. இவை மூன்றும் இணைந்து விக்கியின் முதன்மைபெயர்வெளியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய உள்ளடக்கத்தின் வகை மற்றும் தரத்தினை முடிவாக்குகின்றன. அவற்றை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுத்திக் காணக்கூடாது. தொகுப்பாளர்கள் அனைவரும் இவை மூன்றினையும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். விக்கிப்பீடியாவின் அடித்தளமாக அமைந்துள்ள இக்கொள்கைகளை மாற்றவேண்டுமெனில், நிறுவனர் அளவில் விவாதிக்கப்பட வேண்டும்.

Other Languages
Bahasa Indonesia: Wikipedia:Pemastian
Bahasa Melayu: Wikipedia:Pengesahan
Simple English: Wikipedia:Verifiability