மாதவிடாய்

மாதவிடாய் சுழற்சியை விவரிக்கும் படம்
மாதவிலக்குச் சுழற்சியையும், அதில் பங்கெடுக்கும் இயக்குநீர்களையும் காட்டும் வரைபடம்

மாதவிலக்கு அல்லது மாதவிடாய் என்பது ஒரு பூப்படைந்த பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றமாகும். இது பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதியிலுள்ள ஒரு உறுப்புக்களில் ஒன்றான கருப்பையிலிருந்து, யோனியினூடாக மாதத்தில் 3-7 நாட்கள் குருதியுடன் சேர்ந்து கருப்பையின் உள் சீதமென்சவ்வும் வெளியேறுவதை குறிக்கும்.[1]இடக்கரடக்கலாக வீட்டில் இல்லை, வீட்டிற்கு வெளியே, வீட்டுக்குத் தூரம், வீட்டு விலக்கு என்றும் சொல்வழக்கு உண்டு. மருத்துவப்படி, ஒவ்வொரு மாதமும், கருத்தரிப்பிற்கான தயார்ப்படுத்தலுக்காக, கருப்பையின் உள் மடிப்புகளில் (endometrium) போதிய இரத்தம் நிரம்பி இருக்கிறது. ஒரு பெண் கர்பமடைவாரேயானால், கருப்பையில் தங்கும் கருக்கட்டிய முட்டைக்கு போதிய ஊட்டச்சத்தை வழங்குவதற்காகவே இந்த குருதி நிறைந்த மடிப்புக்கள் உருவாகியிருக்கும். பெண் கருத்தரிக்காத நேரங்களில் இம் மடிப்புகளில் உள்ள தேவையற்ற இழையங்களும், அவற்றுடன் சேர்ந்து மடிப்புக்கள் இருக்கும் நுண்ணிய குருதிக் குழாய்களிலிருந்து வெளிவரும் குருதியும் வெளியே கழிவாக தள்ளப்படுகிறது. இந்நிகழ்வு மாதந் தோறும் சுமார் மூன்று முதல் ஏழு நாட்களுக்கு நடைபெறுகிறது. இதனையே மாதவிடாய் என்கிறோம். இந்த மாதவிடாய் வெளியேற்றம் மாதத்திற்கு ஒருமுறை யோனிமடல் ஊடாக நடைபெறுகிறது. இறுதி நாளோ அல்லது கடைசி இரு நாட்களோ வெளியேற்றம் குறைவாக இருக்கும். சில வேளைகளில் முதல் நாள் குறைவாக இருக்கும்.

மாதவிடாய் மாதவிடாய்ச் சுழற்சியின் ஒரு பகுதியாகும். இச்சுழற்சியின் நீட்டம் 21 நாட்களிலிருந்து 35 நாட்கள் வரை இருக்கும். முதல் மாதவிடாய் பொதுவாக 10 வயதிற்கும் 16 வயதிற்கும் இடையே ஒரு பெண் பூப்படையும்போது ஏற்படுகிறது. இந்நிகழ்வு அனைத்து பாலூட்டிகளிலும் நடந்தாலும், மனிதன், மற்றும் பரிணாம வளர்ச்சியில் மனிதனுடன் நெருங்கிய தொடர்புடைய சிம்பன்சி போன்ற சில விலங்கினங்களிலேயே இவ்வாறு வெளிப்படையாக கருப்பை மடிப்பு வெளியேறுகிறது. மற்ற பாலூட்டிகளில், இனப்பெருக்க சுழற்சியின் இறுதிக் காலத்தில் கருப்பைமடிப்புகள் மீளவும் உள்ளே உறிஞ்சப்படுகின்றது.

Other Languages
Afrikaans: Menstruasie
Alemannisch: Menstruation
aragonés: Menstruación
العربية: حيض
ܐܪܡܝܐ: ܟܦܣܐ
asturianu: Menstruación
azərbaycanca: Menstruasiya
беларуская: Менструацыя
беларуская (тарашкевіца)‎: Мэнструацыя
български: Менструация
বাংলা: রজঃস্রাব
bosanski: Menstruacija
català: Menstruació
Mìng-dĕ̤ng-ngṳ̄: Nguŏk-gĭng
کوردی: پۆن
čeština: Menstruace
Cymraeg: Mislif
Deutsch: Menstruation
Zazaki: Menstruasyon
Ελληνικά: Εμμηνόρροια
emiliàn e rumagnòl: Mestruasiòuṅ
English: Menstruation
Esperanto: Menstruo
español: Menstruación
euskara: Menstruazio
فارسی: قاعدگی
français: Menstruation
Gaeilge: Míostrú
עברית: וסת
hrvatski: Mjesečnica
հայերեն: Դաշտան
interlingua: Menstruation
Bahasa Indonesia: Menstruasi
Interlingue: Menstruation
íslenska: Blæðingar
italiano: Mestruazione
日本語: 月経
Basa Jawa: Nggarap sari
ქართული: მენსტრუაცია
қазақша: Етеккір
ಕನ್ನಡ: ಮುಟ್ಟು
한국어: 월경
Кыргызча: Этек кир
Latina: Menstrua
lietuvių: Menstruacija
latviešu: Menstruācija
മലയാളം: ആർത്തവം
Bahasa Melayu: Haid
မြန်မာဘာသာ: ရာသီလာခြင်း
مازِرونی: رگ
Plattdüütsch: Menstruatschoon
नेपाली: महिनावारी
Nederlands: Menstruatie
norsk nynorsk: Menstruasjon
occitan: Menstruacion
ଓଡ଼ିଆ: ଋତୁସ୍ରାବ
ਪੰਜਾਬੀ: ਮਾਹਵਾਰੀ
polski: Menstruacja
پنجابی: ماہواری
português: Menstruação
română: Menstruație
русский: Менструация
srpskohrvatski / српскохрватски: Menstruacija
Simple English: Menstruation
slovenčina: Menštruácia
slovenščina: Menstruacija
Soomaaliga: Caado-qabid
српски / srpski: Менструација
Basa Sunda: Kareseban
svenska: Menstruation
Kiswahili: Hedhi
Tagalog: Regla
Türkçe: Âdet
українська: Менструація
اردو: حیض
oʻzbekcha/ўзбекча: Hayz
Tiếng Việt: Kinh nguyệt
Winaray: Regla
Vahcuengh: Dawzsaeg
中文: 月經
文言: 月經
粵語: 月經