மன அழுத்தம்

மன அழுத்தம் (Stress) என்பது மனிதன் அல்லது விலங்கு உயிரினத்தில் உண்மையாகவோ அல்லது கற்பனையாகவோ, உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக ஏற்படும் தாக்கங்களுக்கு சரியான முறையில் எதிர்ச் செயலை செய்ய முடியாத நிலை தோன்றுவதன் தொடர்விளைவு அல்லது பின்விளைவாகும்[1]. இந்த மன அழுத்தம் என்ற பதம் உயிரியல் மற்றும் உளவியல் அடிப்படையில் முதலில் 1930 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும் அண்மைக் காலங்களில் இதுபற்றி மிக அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது.

மன அழுத்தத்தின் அறிகுறிகள் உடல், மன, பழக்கவழக்கம் தொடர்பில் மாற்றங்களை ஏற்படுத்தும். மன அழுத்தத்தின் பொதுவான அறிகுறிகளாக எச்சரிக்கை உணர்வு, அதிகரிக்கும் அதிரினலின் சுரப்பு, அதிகரிக்கும் சோர்வு, எளிதில் எரிச்சலடைதல் அல்லது கோபமடைதல், தசைகளில் ஏற்படும் இறுக்கம், எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலைமை போன்றவற்றுடன், அதிகரிக்கும் இதயத் துடிப்பு, தலைவலி போன்ற சில உடலியங்கியல் பிரச்சனைகளும் காணப்படும்[2].

சொல்லியல் ஆரம்பம்

Hans Selye என்ற உட்சுரப்பியியலாளரால் முதன் முதலில் உயிரியலில் இந்த மன அழுத்தம் என்ற பதம் பயன்படுத்தப்பட்டது[3]. பின்னர் எந்தவொரு தாக்கத்திற்கும் தவறான ஒரு உடற்றொழிலியல் எதிர் விளைவு கொடுக்கப்படும் நிலையை காட்டுவதாக இந்த பதத்தை விரிவுபடுத்தினார். மன அழுத்தத்தைத் தூண்டக்கூடிய காரணியினால், மிதமான எரிச்சல் அல்லது கோபம் கொள்ளும் நிலை தொடங்கி, மிகவும் தீவிரமான தொழிற்பட முடியாத நிலை வரையான பாதிப்பு ஏற்படுவதால், மன, உடல் நலத்தில் செயல் நிறுத்தம் ஏற்படலாம் எனக் கூறினார்.

Other Languages
Afrikaans: Stres
العربية: ضغط نفسي
مصرى: توتر
asturianu: Estrés
azərbaycanca: Stress
تۆرکجه: ایسترس
беларуская: Стрэс
беларуская (тарашкевіца)‎: Стрэс
български: Стрес
català: Estrès
čeština: Stres
dansk: Stress
Deutsch: Stress
Ελληνικά: Άγχος
Esperanto: Streso
español: Estrés
eesti: Stress
euskara: Estres
suomi: Stressi
français: Stress
galego: Estrés
עברית: דחק
hrvatski: Napetost
magyar: Stressz
հայերեն: Սթրես
Bahasa Indonesia: Stres
íslenska: Streita
italiano: Stress
Patois: Schres
қазақша: Стресс
한국어: 스트레스
kurdî: Stres
Кыргызча: Стресс
lingála: Stress
lietuvių: Stresas
latviešu: Stress
मराठी: तणाव
Nederlands: Stress
norsk: Stress
polski: Stres
português: Estresse
română: Stres
русский: Стресс
Scots: Stress
srpskohrvatski / српскохрватски: Stres (medicina)
Simple English: Stress (biology)
slovenčina: Stres (biológia)
slovenščina: Stres
shqip: Stresi
српски / srpski: Стрес
тоҷикӣ: Стресс
Türkmençe: Stress
Türkçe: Stres
татарча/tatarça: Стресс
українська: Стрес
vèneto: Stres