மகரந்தம்

பல்வேறு தாவரங்களின் மகரந்த மணிகளின் கலவை மின்னணு நுணுக்குக்காட்டியினால் உருப்பெருக்கப்பட்ட தோற்றம்.
கள்ளிச்செடி ஒன்றின் பூவையும் அதன் மகரந்தக் காம்பையும் காட்டும் உருப்பெருக்கிய படம்.

மகரந்தம் என்பது, நுண்ணியது முதல், சற்றும் பருமனானது வரையிலான மகரந்தமணிகளைக் கொண்ட ஒரு தூள் ஆகும். வித்துத் தாவரங்களில், இந்த மகரந்தமணிகளுள் ஆண் பாலணுக்கள் உற்பத்தியாகின்றன. மகரந்த மணிகள் ஒரு பூவில் இருந்து இன்னொரு பூவுக்கு எடுத்துச் செல்லப்படும்போது, பாலணுக்களைப் பாதுகாப்பதற்காக மகரந்த மணிகளைச் சுற்றிக் கடினமான பூச்சு ஒன்று மூடியிருக்கும். பல மணிகள் சேர்ந்த மகரந்தத்தூளை வெறும் கண்ணால் பார்க்க முடியுமானாலும், ஒவ்வொரு சிறுமணியையும் விவரமாகப் பார்ப்பதற்கு உருப்பெருக்கி அல்லது நுண்நோக்கியின் துணை தேவைப்படும்.

மகரந்தத்தின் அமைப்பு

ஒவ்வொரு மகரந்தமணியும் பதியக் கலங்கள், ஒரு பிறப்பாக்கிக் கலம், ஒரு குழாய்க்கரு, ஒரு பிறப்பாக்கிக் கரு என்பவற்றைக் கொண்டிருக்கும். பெரும்பாலான தாவரங்களின் மகரந்த மணி ஒவ்வொன்றிலும் ஒரு பதியக் கலமே இருக்கும். சில தாவரங்களில் பல பதியக் கலங்கள் இருப்பது உண்டு. பிறப்பாக்கிக் கரு பிரிந்து இரண்டு ஆண் பாலணுக் கலங்களை உருவாக்கும். இந்தக் கலக் கூட்டத்தைச் சுற்றி செலுலோசினால் ஆன கலச் சுவர் இருக்கும்.

மகரந்தம் நுண்வித்திக்கலனில் உற்பத்தியாகிறது. மகரந்தமணிகள் பல்வேறு வடிவங்களிலும், அளவுகளிலும், மேற்பரப்புத் தன்மைகளுடனும் காணப்படுகின்றன. பைன் போன்ற தாவரங்களின் மகரந்தமணிகள் சிறகமைப்புக் கொண்டவை. மிகச் சிறிய மகரந்தமணிகள் 6 மைக்குரோமீட்டர் (0.006 மிமீ) விட்டம் கொண்டவை. காற்றினால் பரவும் மகரந்தமணிகள் 90 - 100 மைக்குரோமீட்டர் வரையான விட்டம் கொண்டவையாக இருக்கலாம். மகரந்தம் குறித்த ஆய்வுத்துறை மகரந்தத்தூளியல் எனப்படுகின்றது. இது, தொல்லுயிரியல், தொல்லியல், சட்டமருத்துவத் தடயவியல் போன்ற துறைகளுக்கும் பயனுள்ள ஒரு துறையாக உள்ளது.

Other Languages
Afrikaans: Stuifmeel
العربية: حبوب اللقاح
asturianu: Polen
azərbaycanca: Çiçək tozu
башҡортса: Һеркә
беларуская: Пылок
български: Цветен прашец
bosanski: Polen
català: Pol·len
čeština: Pyl
Чӑвашла: Шăрка
Cymraeg: Paill
dansk: Pollen
Deutsch: Pollen
Ελληνικά: Γύρη
English: Pollen
Esperanto: Poleno
español: Polen
eesti: Õietolm
euskara: Polen
فارسی: گرده
suomi: Siitepöly
français: Pollen
Gaeilge: Pailin
Gàidhlig: Poilean
galego: Pole
हिन्दी: पराग
hrvatski: Cvjetni pelud
magyar: Virágpor
հայերեն: Ծաղկափոշի
interlingua: Polline
Bahasa Indonesia: Serbuk sari
Ido: Poleno
íslenska: Frjóduft
italiano: Polline
日本語: 花粉
қазақша: Тозаң
한국어: 꽃가루
Latina: Pollen
lietuvių: Žiedadulkė
latviešu: Putekšņi
македонски: Полен
മലയാളം: പരാഗം
Bahasa Melayu: Debunga
مازِرونی: گرده (نمین)
Plattdüütsch: Pollen
Nederlands: Stuifmeel
norsk nynorsk: Pollen
norsk: Pollen
occitan: Pollèn
polski: Pyłek
پنجابی: پراگ (پھل)
português: Pólen
Runa Simi: Sisa
română: Polen
русский: Пыльца
sicilianu: Pòllini
Scots: Pollen
srpskohrvatski / српскохрватски: Pelud
Simple English: Pollen
slovenčina: Včelí peľ
slovenščina: Cvetni prah
српски / srpski: Полен
svenska: Pollen
Kiswahili: Mbelewele
తెలుగు: పుప్పొడి
Türkmençe: Tozgajyk
Türkçe: Polen
українська: Пилок
oʻzbekcha/ўзбекча: Chang donachalari
Tiếng Việt: Phấn hoa
中文: 花粉