பிஜோ எம்மனுவேல் எதிர் கேரள மாநிலம்

பிஜோ எம்மானுவேல் எதிர் கேரள மாநிலம் (Bijoe Emmanuel V. State Of Kerala, வழக்கு எண்: 1987 AIR (SC) 748)) இந்திய உச்ச நீதி மன்றத்தால் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு முக்கிய வழக்கு. இதில் உச்ச நீதிமன்றம், கேரளாவில் யெகோவாவின் சாட்சிகள் மதப்பிரிவைச் சார்ந்த பள்ளி மாணவர்கள் இந்திய தேசிய கீதம் பாட மறுத்ததற்காக பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டத்தை ரத்து செய்து, அவர்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு கேரள அரசுக்கும் பள்ளிக்கும் உத்தரவிட்டது.

வழக்கு விவரம்

யெகோவாவின் சாட்சிகள் மதப்பிரிவினைச் சேர்ந்தவர்கள் அவர்கள் மதவழக்கப்படி எந்த தேசப் பண்ணையும் பாடு மாட்டார்கள். தங்கள் ஆண்டவரை தவிற வேறு எந்த மதச்சின்னத்திலும் ஈடுபாடு கொள்ளாதவர்கள். கேரளாவில் பிஜோ, பினு மோல், பிந்து எம்மானுவேல் ஆகிய மூன்று யெகோவாவின் சாட்சிகள் மதபிரிவைச் சேர்ந்த குழந்தைகள் பள்ளியில் இந்திய தேசியப் பண்ணைப் பாடாமல் இருந்தனர். 1985ல் இவ்விசயம் கேரள சட்டமன்ற உறுப்பினரால் சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டது. இது சட்டத்துக்குப் புறம்பானது என்று அவர்கள், மாநில கல்வி அதிகாரியின் உத்தரவின்படி பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த வெளியேற்றத்தை எதிர்த்து நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டபோது நீதியரசர் கல்வி அதிகாரியின் உத்தரவை உறுதி செய்தார். 1987ல் கீழ்மட்ட நீதிமன்றங்களைக் கடந்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

Other Languages