தோக்கியோ
English: Tokyo

東京都
தோக்கியோ-தோ
தோக்கியோ மாநகரம்
அலுவல் சின்னம் 東京都 தோக்கியோ-தோ தோக்கியோ மாநகரம்
சின்னம்
Official logo of 東京都 தோக்கியோ-தோ தோக்கியோ மாநகரம்
Logo
ஜப்பானில் அமைவிடம்
ஜப்பானில் அமைவிடம்
நாடு சப்பான்
மாகாணம்கான்டோ பகுதி
தீவுஹொன்ஷு
அரசு
 • ஆளுனர்ஷின்டாரோ இஷிஹாரா
பரப்பளவு
 • நகரம்2,187.08
மக்கள்தொகை (2007)
 • நகரம்12
 • நகர்ப்புறம்8
 • நகர்ப்புற அடர்த்தி5,796
இணையதளம்metro.tokyo.jp

தோக்கியோ (Tokyo, டோக்கியோ, சப்பானியம்: 東京, "கிழக்குத் தலைநகரம்"), அலுவல்முறையாக தோக்கியோ பெருநகரம் (東京都 Tōkyō-to), சப்பான் நாட்டின் 47 மாநிலங்களில் ஒன்றும் அதன் தலைநகரமுமாகும். மேலும் இது மக்கள் தொகை அடிப்படையில் உலகின் மிகப்பெரிய நகரமாகும்.[1] தோக்கியோ, ஜப்பானிய அரசு மற்றும் அரசரின் தலைமையிடமாகும். இந்நகரத்தின் மொத்த மக்கள் தொகை 12 மில்லியன் ஆகும். நாட்டின் மக்கள் தொகையில் 10% பேர் இங்கு வாழ்கின்றனர்.

தோக்கியோ சப்பானின் நான்கு முக்கியத் தீவுகளில் பெரிய தீவான ஹொன்ஷூ தீவின் தென்கிழக்குப் பகுதியில் கன்டோ மண்டலத்தில் அமைந்துள்ளது.[2] தோக்கியோ பெருநகரம் 1943ஆம் ஆண்டு முந்தைய தோக்கியோ மாநிலத்தையும் தோக்கியோ நகரத்தையும் ஒன்றிணைத்து உருவானது. தோக்கியோ ஒரு நகரமாகக் கருதப்பட்டாலும் இதனை பெருநகர மாநிலம் என்றே குறிப்பிடுகின்றனர். பெருநகர மாநிலமாக தோக்கியோ நகரத்தை ஒன்றிணைப்பதற்கு முன்பிருந்த 23 நகராட்சி வார்டுகளும் சிறப்பு வார்டுகளாக அரசாளப்படுகின்றன. ஒவ்வொன்றும் தனி நகரமாகவே ஆளப்படுகிறது. இவற்றைத் தவிர பெருநகர மாநிலத்தில் 39 நகராட்சிகள் உள்ளன. இவற்றில் 30 மாநிலத்தின் மேற்கிலும் 8 இசூ தீவிலும் ஒன்று ஓகசவரா தீவிலும் உள்ளன.

சப்பானில் உள்ள நான்கு நபர்களில் ஓருவர் தோக்கியோவில் வாழ்கின்றார். 100 க்கு மேற்பட்ட கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இங்கு அமைந்துள்ளது. கல்விக்காகவும் வேலை வாய்ப்புக்களுக்காகவும் பெருமளவு சப்பானியர்கள் இந்த நகரிற்கு குடி பெயருகின்றனர். பெரும்பாலான சப்பானிய நிறுவனங்கள் தமது தலைமை அலுவலகத்தை இங்கேயே அமைத்துள்ளனர். அமெரிக்க $1.479 டிரில்லியன் கொள்வனவு ஆற்றல் சமநிலைப்படுத்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட தோக்கியோ உலகின் மிகப்பெரும் பொருளியல் சமூகத்தைக் கொண்ட நகரங்களில் முதலாவதாக விளங்குகிறது. உலகின் எந்த நகரத்திற்கும் இல்லாத பெருமையாக உலகளாவிய பார்ச்சூன் 500 நிறுவனங்களில் 51 நிறுவனங்கள் இந்த நகரிலிருந்து இயங்குகின்றன.[3]

உலகப் பொருளாதாரத்தின் மூன்று கட்டுப்பாட்டு மையங்களில் ஒன்றாக நியூயார்க் நகரம் மற்றும் இலண்டன் நகரங்களுடன் அறியப்படுகிறது.[4] இந்த நகரம் ஓர் உலகளாவிய நகரமாக கருதப்படுகிறது.[5] பல்வேறு உலக மக்கள் வாழும் நகரங்களில் நான்காவதாக மற்றொரு பட்டியலில் இடம் பெற்றுள்ளது.[6] 2012இல் தோக்கியோ வெளிநாட்டினருக்கு மிகவும் விலையுயர்ந்த நகரமாக வாழும் செலவினங்களை கணிக்கும் மெர்சர் அறிக்கை குறிப்பிடுகின்றது.[7] மேலும் 2009இல் மிகவும் வாழத்தக்க நகரமாகவும் மோனோக்கிள் என்ற வாழ்நிலை இதழ் அறிவித்துள்ளது.[8] உணவகங்களுக்கும் தங்கும் விடுதிகளுக்கும் நட்சத்திரங்கள் வழங்கும் மிச்லின் வழிகாட்டியில் தோக்கியோவிற்கு உலகின் வேறெந்த நகரையும் விட கூடுதலான நட்சத்திரங்கள் கிடைத்துள்ளன.[9][10]

தோக்கியோவில் 1964 கோடைக்கால ஒலிம்பிக்சுப் போட்டிகள் நடந்தேறியுள்ளன. தற்போது 2020ஆம் ஆண்டிற்கான கோடைக்கால ஒலிம்பிக்சை நடத்த விண்ணப்பித்துள்ளது.[11]

Other Languages
Acèh: Tokyô
адыгабзэ: Токио
Afrikaans: Tokio
Alemannisch: Tokio
አማርኛ: ቶክዮ
aragonés: Tokio
العربية: طوكيو
ܐܪܡܝܐ: ܛܘܩܝܘ
مصرى: طوكيو
অসমীয়া: টকিঅ'
asturianu: Tokiu
Aymar aru: Tokyo
azərbaycanca: Tokio
تۆرکجه: توکیو
башҡортса: Токио
Boarisch: Prefektua Tokio
žemaitėška: Tokėjės
Bikol Central: Tokyo
беларуская: Токіа
беларуская (тарашкевіца)‎: Токіё
български: Токио
भोजपुरी: टोकियो
Bislama: Tokyo
Bahasa Banjar: Tokyo
bamanankan: Tokyo
বাংলা: টোকিও
བོད་ཡིག: ཐོ་ཁེ་ཡོ།
brezhoneg: Tokyo
bosanski: Tokio
буряад: Токёо
català: Tòquio
Chavacano de Zamboanga: Tokio
нохчийн: Токио
Cebuano: Tokyo
Chamoru: Tokyo
ᏣᎳᎩ: ᏙᎩᏲ
Tsetsêhestâhese: Tokyo
کوردی: تۆکیۆ
Nēhiyawēwin / ᓀᐦᐃᔭᐍᐏᐣ: ᑐᑭᔪ
qırımtatarca: Tokyo
čeština: Prefektura Tokio
Чӑвашла: Токио
Cymraeg: Tokyo
dansk: Tokyo
Zazaki: Tokyo
dolnoserbski: Tokio
डोटेली: टोकियो
ཇོང་ཁ: ཊོ་ཀི་ཡ
eʋegbe: Tokyo
Ελληνικά: Τόκιο
English: Tokyo
Esperanto: Tokio
español: Tokio
euskara: Tokio
estremeñu: Tóquiu
فارسی: توکیو
suomi: Tokio
Võro: Tokio
føroyskt: Tokyo
français: Tokyo
Frysk: Tokio
Gaeilge: Tōkyō
贛語: 東京
Gàidhlig: Tokyo
galego: Toquio
Avañe'ẽ: Tókio
𐌲𐌿𐍄𐌹𐍃𐌺: 𐍄𐌰𐌿𐌺𐌹𐌰𐌿
Hausa: Tokyo
客家語/Hak-kâ-ngî: Tûng-kîn-tû
עברית: טוקיו
हिन्दी: टोक्यो
Fiji Hindi: Tokyo
hrvatski: Tokio
hornjoserbsce: Tokio
Kreyòl ayisyen: Tokyo
magyar: Tokió
հայերեն: Տոկիո
interlingua: Tokyo
Bahasa Indonesia: Tokyo
Interlingue: Tōkyō
Iñupiak: Tokyo
Ilokano: Tokyo
ГӀалгӀай: Токио
Ido: Tokyo
íslenska: Tókýó
italiano: Tokyo
ᐃᓄᒃᑎᑐᑦ/inuktitut: ᑑᑭᐅ
日本語: 東京都
Patois: Tuokio
la .lojban.: tokios
Basa Jawa: Tokyo
ქართული: ტოკიო
Qaraqalpaqsha: Tokiyo
Taqbaylit: Tokyo
Kabɩyɛ: Tokiyo
Gĩkũyũ: Tokyo
қазақша: Токио
kalaallisut: Tokyo
ភាសាខ្មែរ: ទីក្រុងតូខ្យូ
ಕನ್ನಡ: ಟೋಕ್ಯೊ
한국어: 도쿄도
kurdî: Tokyo
kernowek: Tokyo
Кыргызча: Токио
Latina: Tokium
Ladino: Tokio
Lëtzebuergesch: Prefektur Tokio
лезги: Токио
Luganda: Tokyo
Limburgs: Tokio
Ligure: Tòkyo
lumbaart: Tokyo
lingála: Tokyo
ລາວ: ໂຕກຽວ
لۊری شومالی: توکیو
lietuvių: Tokijas
latviešu: Tokija
मैथिली: टोक्यो
мокшень: Токио
Malagasy: Tokyo
олык марий: Токио
Māori: Tokyo
Baso Minangkabau: Tokyo
македонски: Токио
മലയാളം: ടോക്കിയോ
монгол: Токио
मराठी: तोक्यो
кырык мары: Токио
Bahasa Melayu: Tokyo
Malti: Tokjo
Mirandés: Tóquio
မြန်မာဘာသာ: တိုကျိုမြို့
эрзянь: Токио ош
مازِرونی: توکيو
Dorerin Naoero: Tokyo
Napulitano: Tokyo
Plattdüütsch: Tokio
Nedersaksies: Tokio
नेपाली: टोक्यो
नेपाल भाषा: तोक्यो
Nederlands: Tokio
norsk nynorsk: Tokyo
norsk: Tokyo
Novial: Tokyo
Chi-Chewa: Tokyo
occitan: Tòquio
Livvinkarjala: Tokio
ଓଡ଼ିଆ: ଟୋକିଓ
Ирон: Токио
ਪੰਜਾਬੀ: ਟੋਕੀਓ
Papiamentu: Tokyo
Pälzisch: Tokio
Norfuk / Pitkern: Tokyo
polski: Tokio
Piemontèis: Tokyo
پنجابی: ٹوکیو
Ποντιακά: Τόκιο
پښتو: توکيو
português: Tóquio
Runa Simi: Tokyo
rumantsch: Tokio
română: Tōkyō
armãneashti: Tokyo
tarandíne: Tokyo
русский: Токио
русиньскый: Токіо
Kinyarwanda: Tokyo
संस्कृतम्: टोक्यो
саха тыла: Токио
ᱥᱟᱱᱛᱟᱲᱤ: ᱴᱚᱠᱭᱚ
sardu: Tokio
sicilianu: Tochiu
Scots: Tokyo
davvisámegiella: Tokio
srpskohrvatski / српскохрватски: Tokio
සිංහල: ටෝකියෝ
Simple English: Tokyo Metropolis
slovenčina: Tokio
slovenščina: Tokio
chiShona: Tokyo
Soomaaliga: Tokyo
shqip: Tokjo
српски / srpski: Токио
Seeltersk: Tokio
Basa Sunda: Tokyo
Kiswahili: Tokyo
ślůnski: Tokjo
ತುಳು: ಟೋಕಿಯೋ
తెలుగు: టోక్యో
Türkmençe: Tokio
Tagalog: Tokyo
Setswana: Tokyo
Tok Pisin: Tokyo
Türkçe: Tokyo
татарча/tatarça: Токио
chiTumbuka: Tokyo
Twi: Tokyo
reo tahiti: Tokyo
удмурт: Токио
ئۇيغۇرچە / Uyghurche: توكيو
українська: Токіо
اردو: توکیو
oʻzbekcha/ўзбекча: Tokio
vèneto: Tokyo
vepsän kel’: Tokio
Tiếng Việt: Tokyo
Volapük: Tokyo
Winaray: Tokyo
Wolof: Tokyo
吴语: 东京都
მარგალური: ტოკიო
ייִדיש: טאקיא
Yorùbá: Tokyo
Vahcuengh: Dunghgingh
中文: 東京都
文言: 東京都
Bân-lâm-gú: Tang-kiaⁿ-to͘
粵語: 東京都
isiZulu: ITokyo