கெபேர்னெட் சுவிக்னோன்

கெபேர்னெட் சுவிக்னோன்
திராட்சை (விட்டிசு)
Red Mountain Cabernet Sauvignon grapes from Hedge Vineyards.jpg
கெபேர்னெட் சுவிக்னோன் திராட்சைகள்
Color of berry skinBlack
வேறு பெயர்பூஷே, பூஷ், பெதித்-பூஷே, பெதித்-கெபேர்னெட், பெதித்-வீதுர், வீதுர், சுவிக்னோன் ரூஜ்
குறிப்பிடத்தக்க பகுதிகள்பொர்தோ, டக்சனி, சான்டா குரூசு மலைகள், நாபா பள்ளத்தாக்கு, சோனோமா, ஆத்திரேலியா, தென்னாப்பிரிக்கா திராட்சை மதுக்கள்
குறிப்பிடத்தக்க வைன்கள்வகைப்படுத்தப்பட்ட பொர்தோ பண்ணை, கலிபோர்னிய மரபு மதுக்கள்
உகந்த மண்சரளைக்கல்
பிரச்சினைகள்பழுக்காதிருத்தல், மாவு வெண்பூஞ்சை, யுடைபெல்லா நுண்ணுயிரி
Wine characteristics
பொதுஅடர்ந்த, கருநீல, துவர்ப்புள்ள
குளிட் காலநிலைதாவரம்சார், குடை மிளகாய், தண்ணீர்விட்டான் கொடி
இடைக் காலநிலைபுதினா, மிளகு, யுகலிப்டசு
சூடான காலநிலைபழக்கூழ்

கெபேர்னெட் சுவிக்னோன் (Cabernet Sauvignon) உலகில் மிகவும் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ள சிவப்பு வைன் திராட்சை வகையாகும். இது கிட்டத்தட்ட அனைத்து முதன்மையான வைன் தயாரிக்கும் நாடுகளிலும் விளைவிக்கப்படுகிறது. கனடாவின் ஒகனாகன் பள்ளத்தாக்கிலிருந்து லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கு வரை பல்வேறு வானிலைகளில் பயிராகிறது. கெபேர்னெட் சுவிக்னோன் பொர்தோவின் வைன்களில் மெர்லோட் மற்றும் கெபேர்னெட் பிரான்க் வகை மதுக்களுடன் கலக்கப்பட்டு உலகளவில் பிரபலமானது. பிரான்சிலிருந்து இவ்வகை திராட்சை ஐரோப்பாவிற்கும் பின்னர் அமெரிக்க கண்டங்களுக்கும் பரவியது. கலிபோர்னியாவின் சான்டா குரூசு மலைப்பகுதிகளிலும் நாபா பள்ளத்தாக்கிலும் நியூசிலாந்தின் ஆக்சு விரிகுடாப் பகுதியிலும் ஆத்திரேலியாவின் மார்கெரெட் ஆற்றுப் பகுதியிலும் கூனவார்ரா பகுதியிலும் சிலியின் மைப்போ பள்ளத்தாக்கிலும் கொல்ச்சகுவா பள்ளத்தாக்கிலும் விளைகிறது. 20ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியும் இதுவே உலகில் மிகவும் பரவலாக பயிரிடப்பட்ட மதிப்புமிக்க சிவப்பு வைன் திராட்சையாகும். 1990களில் தான் இதனை மெர்லோட் வகை திராட்சை மிஞ்சியது.[1]இருப்பினும்,கெபேர்னெட் சுவிக்னோன் மிகவும் பரவலாக பயிரிடப்பட்டுள்ள வைன் திராட்சையாக திகழ்கிறது. 2015இல் உலகளவில் மொத்தம் 341000 எக்டேர் பரப்பில் விளைவிக்கப்படுகிறது.[2]

Other Languages