குளுக்கோசு
English: Glucose

டி-குளுக்கோசு
D-Glucose
Glucose structure.svg
DGlucose Fischer.svg
Glucose chain structure.svg
D-glucose-chain-3D-balls.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
6-(hydroxymethyl)oxane-2,3,4,5-tetrol
வேறு பெயர்கள்
Dextrose, grape sugar, blood sugar, corn sugar
இனங்காட்டிகள்
50-99-7 N
AbbreviationsGlc
ChemSpider5589
EC number200-075-1
யேமல் -3D படிமங்கள்Image
பப்கெம்5793
பண்புகள்
C6H12O6
வாய்ப்பாட்டு எடை180.16 g/mol
அடர்த்தி1.54 g/cm3
உருகுநிலை
91 g/100 ml (25 °C)
methanol-இல் கரைதிறன்0.037 M
ethanol-இல் கரைதிறன்0.006 M
tetrahydrofuran-இல் கரைதிறன்0.016 M
வெப்பவேதியியல்
formation ΔfHo298−1271 kJ/mol
combustion ΔcHo298−2805 kJ/mol
நியம மோலார்
எந்திரோப்பி So298
209.2 J K−1 mol−1
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள்ICSC 0865
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

குளுக்கோசு அல்லது குளுக்கோஸ் (Glucose, C6H12O6) என்பது ஆறு கரிம அணுக்களும் ஆறு ஆக்சிசன் அணுக்களும் 12 ஐதரசன் அணுகளுடன் சேர்ந்திருக்கும் ஓர் எளிய மாவு இனியம் அல்லது சர்க்கரை ஆகும். இது ஓர் (ஒற்றை சாக்கரைடு) வகைகளில் ஒன்று. குளுக்கோசு உயிரியலில் முக்கியமான ஒரு கார்போ ஐதரேட்டாக உள்ளது. உயிரணுக்கள் இதனை ஆற்றல் தரும் ஒரு அடிப்பொருளாகவும் வளர்சிதைமாற்றத்துக்கான இடைப்பொருளாகவும் பயன்படுத்துகின்றன. குளுக்கோசு ஒளிச்சேர்க்கையின் முக்கிய விளைபொருள்களுள் ஒன்றாகவும் உயிரணு மூச்சைத் தொடக்கும் ஒன்றாகவும் இருக்கின்றது. நீர்நீக்கிய குளுக்கோசில் இருந்து மாவுப்பொருள் அல்லது மாவியம் (தரசம்) மற்றும் செல்லுலோசு ஆகிய பாலிமர்கள் உருவாகின்றன. குளுக்கோசு என்கிற சொல் குளுகசு (γλυκύς) என்கிற கிரேக்கச் சொல்லில் இருந்து வந்ததாகும். இதன் பொருள் இனிப்பு என்பதாகும். ஓசு (-ose) என்கிற பின்னொட்டு உயிர்வேதியல் பொருள்களில், இனியங்களில் (சக்கரைப்பொருள்களில்) ஒன்று என்று குறிக்கின்றது.

குளுக்கோசு பல்வேறு உருவாக்க அமைப்புகளைக் கொண்டது என்றாலும் இந்த அனைத்து அமைப்புகளையும் இரண்டு கண்ணாடி எதிர் உருவ (பிம்ப) குடும்பங்களாக (இரட்டை ஐசோமெர்கள்) பிரிக்கலாம். டி-குளுக்கோசு என்று குறிக்கப்படும் குளுக்கோசின் வலக் கை வடிவத்தில் இருந்து தருவிக்கப்பட்ட ஐசோமர்கள் மட்டுமே இயற்கையில் கிடைக்கப் பெறுகின்றன. டி-குளுக்கோசு பெரும்பாலும், குறிப்பாக உணவுத் துறையில், டெக்ஸ்ட்ரோசு எனக் குறிப்பிடப்படுகிறது. டெக்ஸ்ட்ரோசு என்கிற சொல் டெக்ஸ்ட்ரோரொடேடரி குளுக்கோஸ் (dextrorotatory glucose) என்பதில் இருந்து தருவிக்கப்பட்டதாகும்.[1]. டெக்ஸ்ட்ரோசு கரைசல்கள் முனைநிறுத்திய ஒளியை (polarized light) வலப்புறமாக சுழற்றுகின்றன (இலத்தீன் மொழியில் டெக்ஃச்ட்டர் (dexter) என்றால் வலது). இந்தக் கட்டுரை டி-குளுகோசைப்பற்றியது. இந்த மூலக்கூறின் கண்ணாடி எதிருருவமான (பிம்பமான) குளுகோசு தனியாக விளக்கப்படுகின்றது.

Other Languages
Afrikaans: Glukose
العربية: جلوكوز
অসমীয়া: গ্লুক'জ
asturianu: Glucosa
azərbaycanca: Qlükoza
تۆرکجه: گلوکوز
беларуская: Глюкоза
беларуская (тарашкевіца)‎: Глюкоза
български: Глюкоза
বাংলা: গ্লুকোজ
bosanski: Glukoza
català: Glucosa
Mìng-dĕ̤ng-ngṳ̄: Buò-dò̤-tòng
کوردی: گلووکۆز
čeština: Glukóza
dansk: Glukose
Deutsch: Glucose
Ελληνικά: Γλυκόζη
English: Glucose
Esperanto: Glukozo
español: Glucosa
eesti: Glükoos
euskara: Glukosa
فارسی: گلوکز
suomi: Glukoosi
français: Glucose
Nordfriisk: Glukoos
Gaeilge: Glúcós
galego: Glicosa
עברית: גלוקוז
हिन्दी: ग्लूकोज़
hrvatski: Glukoza
magyar: Glükóz
հայերեն: Գլյուկոզ
interlingua: Glucosa
Bahasa Indonesia: Glukosa
Ido: Glikoso
íslenska: Glúkósi
italiano: Glucosio
日本語: グルコース
Jawa: Glukosa
ქართული: გლუკოზა
қазақша: Глюкоза
ಕನ್ನಡ: ಗ್ಲುಕೋಸ್
한국어: 글루코스
kurdî: Glukoz
Кыргызча: Глюкоза
Latina: Glucosum
lumbaart: Glucosa
lietuvių: Gliukozė
latviešu: Glikoze
македонски: Глукоза
മലയാളം: ഗ്ലൂക്കോസ്
монгол: Глюкоз
Bahasa Melayu: Glukosa
မြန်မာဘာသာ: ဂလူးကို့သကြား
Nederlands: Glucose
norsk nynorsk: Glukose
norsk: Glukose
occitan: Glucòsa
Oromoo: Giluukoosii
ਪੰਜਾਬੀ: ਗੁਲੂਕੋਸ
Kapampangan: Glucose
polski: Glukoza
پنجابی: گلوکوز
português: Glicose
Runa Simi: Uwas misk'i
română: Glucoză
русский: Глюкоза
Scots: Glucose
srpskohrvatski / српскохрватски: Glukoza
සිංහල: ග්ලූකෝස්
Simple English: Glucose
slovenčina: Glukóza
slovenščina: Glukoza
shqip: Glukoza
српски / srpski: Глукоза
Basa Sunda: Glukosa
svenska: Glukos
Kiswahili: Glukosi
తెలుగు: గ్లూకోస్
Tagalog: Glukosa
Türkçe: Glukoz
татарча/tatarça: Глюкоза
ئۇيغۇرچە / Uyghurche: گلۇكوزا
українська: Глюкоза
اردو: گلوکوز
oʻzbekcha/ўзбекча: Glukoza
Tiếng Việt: Glucose
Winaray: Glukosa
მარგალური: გლუკოზა
中文: 葡萄糖
Bân-lâm-gú: Phû-tô-thn̂g
粵語: 葡萄醣