கர்ட் லெவின்

கர்ட் லெவின்
பிறப்புசெப்டம்பர் 9, 1890
மோகில்னோ, கிரெய்சு மோகில்னோ, போசின் மாகாணம், ஜெர்மானியப் பேரரசு
இறப்புபெப்ரவரி 12, 1947(1947-02-12) (அகவை 56)
நியூட்டன்வில்லே, மாசாசூசெட்சு, ஐக்கிய அமெரிக்கா
குடியுரிமைஜெர்மனி, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
தேசியம்ஜெர்மன்
துறைஉளவியல்
Alma materபெர்லின் பல்கலைக்கழகம்
துறை ஆலோசகர்கார்ல் ஸ்டம்ப்
முக்கிய மாணவர்லியான் பெசுடிங்கர், ரோஜர் பார்க்கர், புளுமா செய்கார்னிக், ஜான் திபாட்
அறியப்பட்டதுகுழு இயக்கவியல், செயல் ஆராய்ச்சி, T-குழுக்கள்

கர்ட் லெவின் (Kurt Lewin) (செப்டம்பர் 9, 1890 – பிப்ரவரி 12, 1947) ஒரு ஜெர்மானிய-அமெரிக்க உளவியலாளர் ஆவார். இவர் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சமூக, நிறுவன மற்றும் பயன்பாட்டு உளவியலின் முன்னோடிகளில் ஒருவராவார்.[1] (n//ləˈvn/ lə-VEEN) அவரது பிறந்த நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட லெவின், தனக்கென ஒரு புதிய வாழ்வை உருவாக்கியிருந்தார். அவர் தன்னையும் தனது பங்களிப்புகளையும் மூன்று பகுப்பாய்வுகளுக்குள் வரையறுத்துக் கொண்டார்: பயன்பாட்டு ஆராய்ச்சி, செயல் ஆராய்ச்சி மற்றும் குழு தொடர்பு ஆகியவை அவர் தேர்ந்தெடுத்த பகுதிகளாகும். இவற்றில் தகவல் தொடர்புத் துறையில் அவரது பிரதானமான கொடைகள் இருந்தன எனலாம்.

லெவின் பெரும்பாலும் "சமூக உளவியல் பிரிவின் நிறுவனர்" என்று அங்கீகரிக்கப்படுகிறார். இவர் தான் முதன் முதலில் குழு இயக்கவியல் மற்றும் நிறுவன மேம்பாடு குறித்த ஆய்வுகளை மேற்கொண்டவராவார். 2002 ஆம் ஆண்டில் பொது உளவியல் பார்வை இதழால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் கர்ட் லெவின் மிகவும் அதிகமாகக் குறிப்பிடப்பட்ட 20 ஆம் நூற்றாண்டு உளவியலாளர்களின் வரிசையில் 18 ஆம் இடத்தைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[2]

வாழ்க்கை வரலாறு

தொடக்க கால வாழ்க்கை மற்றும் கல்வி

1890 ஆம் ஆண்டில், ஒரு யூதக் குடும்பத்தில் பிரஷ்யா (தற்போதைய போலந்து) நாட்டில் போஸ்னான் மாகாணத்தில் மோக்லினோ கவுண்டியில், மோக்லினோவில் பிறந்தார். அவர் பிறந்த ஊரானது 5000 மக்கள் தொகையைக் கோண்ட ஒரு சிறிய கிராமம் ஆகும். அந்த மக்கள் தொகையில் ஏறத்தாழ 150 பேர் மட்டுமே யூதர்கள் ஆவர்.[3] லெவின் தனது வீட்டிலிருந்து பழமைவாதக் கோட்பாடு மிக்க யூதக் கல்வியடையப் பெற்றார். [4] அவர் ஒரு எளிய நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த நான்கு குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தார். அவருடைய தந்தை ஒரு சிறிய மளிகைக்கடையை வைத்திருந்தார். அவரது குடும்பமானது கடை இருந்த அடுக்ககத்தின் மேல் தளத்தில் வசித்து வந்தனர். அவரது தந்தையார் லியோபோல்ட் தனது சகோதரர் மாக்சுடன் இணைந்து ஒரு பண்ணைத் தோட்டத்தை வைத்திருந்தார். இருப்பினும், அந்தத் தோட்டமானது சட்டப்படியாக ஒரு கிறித்தவருக்குச் சொந்தமானதாக இருந்தது. ஏனெனில், அந்தக் கிராமத்தில் யூதர்கள் பண்ணைகளைச் சொந்தமாகக் கொண்டிருக்க முடியாத நிலை இருந்தது. லெவினின் குடும்பம் 1905 ஆம் ஆண்டு பெர்லினுக்கு லெவின் மற்றும் அவரது சகோதரர்கள் சிறந்த கல்வியைப் பெறுகின்ற நோக்கத்திற்காக இடம் பெயர்ந்தனர்.[3] 1905 ஆம் ஆண்டிலிந்து 1908 வரை, லெவின் கைசேரியன் அகஸ்டா உடற்பயிற்சிக் கூடத்தில் பயின்றார். அங்கு, அவர் பழமையான மானிடவியல் சார்ந்த கல்வியைப் பெற்றார்.[3] 1909 ஆம் ஆண்டில், அவர் ப்ரீபர்க் பல்கலைக் கழகத்தில் மருத்துவம் படிப்தற்காக நுழைந்தார். ஆனால், உயிரியலைப் படிப்பதற்காக அவர் முனிச் பல்கலைக்கழகத்திற்கு மாறினார். அவர் அந்தக் காலகட்டத்தில் சமூகவியல் இயக்கங்களிலும், பெண்கள் உரிமைகள் தொடர்பான இயக்கங்களிம் ஈடுபாட்டுடன் பங்கேற்றார்.[5] ஏப்ரல் 1910 இல், அவர் இராயல் பிரெடெரிக்-வில்கெம்ஸ் பல்கலைக்கழகத்தில் இன்னும் மருத்துவ மாணவராக இருந்தார். 1911 ஈஸ்டர் பருவத்தின் போது, அவரது ஆர்வம் மெய்யியலை நோக்கித் திரும்பியது. 1911 ஆம் ஆண்டின் கோடைகாலத்தின் போது, அவரது பெரும்பான்மையான படிப்புகள் உளவியல் சார்ந்ததாக இருந்தது. [3] பெர்லின் பல்கலைக்கழகத்தில் இருந்த போது அவர் கார்ல் ஸ்டம்புடன் இணைந்து 14 பயிற்சி வகுப்புகளில் சேர்ந்திருந்தார்.[3]

Other Languages
العربية: كورت ليفين
asturianu: Kurt Lewin
تۆرکجه: کورت لوین
български: Курт Левин
català: Kurt Lewin
čeština: Kurt Lewin
Deutsch: Kurt Lewin
English: Kurt Lewin
Esperanto: Kurt Lewin
español: Kurt Lewin
eesti: Kurt Lewin
فارسی: کورت لوین
suomi: Kurt Lewin
français: Kurt Lewin
hrvatski: Kurt Lewin
magyar: Kurt Lewin
հայերեն: Կուրտ Լևին
Bahasa Indonesia: Kurt Lewin
italiano: Kurt Lewin
ქართული: კურტ ლევინი
한국어: 쿠르트 레빈
kurdî: Kurt Lewin
lietuvių: Kurt Lewin
Malagasy: Kurt Lewin
македонски: Курт Левин
Nederlands: Kurt Lewin
polski: Kurt Lewin
Piemontèis: Kurt Lewin
português: Kurt Lewin
русский: Левин, Курт
slovenčina: Kurt Lewin
slovenščina: Kurt Lewin
svenska: Kurt Lewin
українська: Курт Цадек Левін
oʻzbekcha/ўзбекча: Levin Kurt
Winaray: Kurt Lewin