கடல் சிங்கம்

கடல்சிங்கம்
புதைப்படிவ காலம்:Late Oligocene-Holocene
Sealion052006.JPG
California sea lion (Zalophus californianus)
உயிரியல் வகைப்பாடு
திணை:விலங்கினம்
தொகுதி:முதுகுநாணி
வகுப்பு:பாலூட்டி
வரிசை:ஊனுண்ணி
துணைவரிசை:கலிபோர்னியா
பெருங்குடும்பம்:பின்னிபேடியா
குடும்பம்:Otariidae
துணைக்குடும்பம்:Otariinae
Genera

Eumetopias
Neophoca
Otaria
Phocarctos
Zalophus

கடல் சிங்கங்கள் (Sea lions) என்பது கடல் வாழ் துடுப்புகாலிகள் குடும்பத்தைச் சேர்ந்த பாலூட்டிகள் ஆகும். கடல் சிங்கங்கள் இரண்டு சிறிய வெளிக் காதுகள், துடுப்பு போன்ற நீண்ட நான்கு கால்கள், தடித்த மேல் தோல், அடர்த்தியான சிறிய முடிகளும், கொழுப்பு அடர்ந்த உடலும் கொண்ட ஊனுண்ணிகளாகும். துடுப்பு போன்ற கால்களால் கடல் சிங்கங்கள் கடல் நீரில் நன்கு நீந்த இயலும். இதன் முக்கிய இரைகள் கடல் மீன்கள், மெல்லுடலிகள் மற்றும் நண்டுகளாகும்.

கடல்சிங்கங்கள் வட துருவம் மற்றும் தென் துருவக் கடற்கரைகளிலும், வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலிலும் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா, தெற்கு நியூசிலாந்து கடற்கரைகளிலும் காணப்படுகிறது.[1] கடல் சிங்கங்களில் வாழ்நாள் 20-30 ஆண்டுகளாகும்.

ஆண் கடல் சிங்கத்தின் அதிக பட்ச எடை 300 கிலோ கிராம், நீளம் 8 அடியாகும். பெண் கடல் சிங்கத்தின் அதிக பட்ச எடை 100 கிலோ கிராம், நீளம் 6 அடியாகும். ஸ்டெல்லர் வகை கடல் சிங்கத்தின் அதி கூடிய எடை 1000 கி கி., மற்றும் நீளம் 10 அடியாகும். கடல் சிங்கங்கள் ஒரே நேரத்தில் தன் உடல் எடையில் 5-8% (15–35 lb (6.8–15.9 kg)) வரையிலான உணவை உண்ணக்கூடியது.

ஸ்டெல்லார் கடல் சிங்கங்கள், அலாஸ்கா

வெளிப்புற காதுகள் கொண்ட கடல்சிங்கங்களின் குடும்பத்தில் கடல்நாய்கள் மற்றும் நீண்ட தந்தம் போன்ற இரண்டு பற்களைக் கொண்ட பனிக்கடல் யானை அடங்கியுள்ளது.[2] கடல் சிங்கங்கள் சனவரி முதல் மார்ச் முடிய உள்ள காலத்தில் கடற்கரைகளில் குட்டியிடுகிறது.உலகில் தற்போது 1,65,000 கடல் சிங்கங்கள் இருப்பதாக கணக்கிட்டுள்ளனர்.

Other Languages
العربية: أسد البحر
azərbaycanca: Dəniz şirləri
български: Морски лъвове
brezhoneg: Morleon
bosanski: Morski lav
català: Lleó marí
English: Sea lion
Esperanto: Marleono
español: Otariinae
euskara: Itsas lehoi
français: Otariinae
Gaeilge: Rón mór
עברית: אריות ים
hrvatski: Morski lavovi
հայերեն: Ծովառյուծներ
interlingua: Otariinae
Bahasa Indonesia: Singa laut
Ido: Otario
italiano: Otariinae
日本語: アシカ
ქართული: ზღვის ლომი
lietuvių: Jūrų liūtai
latviešu: Jūras lauva
မြန်မာဘာသာ: ပင်လယ်ဖျံ
Nāhuatl: Amiztli
Nederlands: Zeeleeuwen
norsk nynorsk: Sjøløver
português: Leão-marinho
русский: Морские львы
srpskohrvatski / српскохрватски: Morski lav
Simple English: Sea lion
slovenščina: Morski levi
српски / srpski: Морски лав
Tagalog: Leon-dagat
українська: Морські леви
oʻzbekcha/ўзбекча: Dengiz arslonlari
Tiếng Việt: Sư tử biển
吴语: 海狮
中文: 海獅
Bân-lâm-gú: Hái-sai
粵語: 海獅