எயிட்சு

பெறப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க்கூட்டறிகுறி (எயிட்சு)
Red Ribbon.svg
உலகளவிலான எய்ட்சு நோய் எதிர்ப்பைக் குறிக்கும் சிகப்பு நாடா சின்னம்.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புinfectious disease
ICD-1024.
ICD-9-CM042
நோய்களின் தரவுத்தளம்5938
MedlinePlus000594
ஈமெடிசின்emerg/253
Patient UKஎயிட்சு
MeSHD000163

பெறப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க்கூட்டறிகுறி அல்லது பெறப்பட்ட மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டறிகுறி (Acquired immune deficiency syndrome) என்பது எச்.ஐ.வி எனப்படும் மனிதனின் நோய் எதிர்ப்பாற்றல் குறைப்பு செய்யும் திறன் கொண்ட தீ நுண்மத்தால் (வைரசால்) ஏற்படுகிற ஒரு நோயாகும்[1][2],[3].

இந்த நோயானது மனிதர்களின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் செயற்படுதிறன் வலுவற்றதாகும் நிலையை படிப்படியாகத் தீவிரமடையச் செய்து, வாய்ப்பை எதிர் நோக்கியிருக்கும் தொற்றுநோய்களாலும், கட்டிகளாலும் மனிதர்களை இலகுவில் பாதிப்படையக் கூடியவர்களாகச் செய்கிறது. எச்.ஐ.வி தொற்றுக்குட்பட்ட இரத்தம், விந்து, யோனித் திரவம், முன்விந்துத் திரவம், தாய்ப்பால் போன்ற உடல் திரவங்களைக் கொண்ட உடலில் உள்ள சீதச்சவ்வு அல்லது இரத்த ஓட்டத்துடன் ஏற்படும் நேரடித் தொடர்பினால் இந்த வைரசானது ஒருவரிலிருந்து வேறொருவருக்குத் தொற்றுகின்றது[4][5].

இத்தகைய நோய்ப்பரப்புதல் ஆசனவாய், யோனிக் குழாய் அல்லது வாய் வழி கொள்ளும் உடலுறவினாலோ, இரத்ததானத்தினாலோ, கிருமி பாதித்த ஊசிகளின் உபயோகத்தினாலோ, தாயிடமிருந்து குழந்தைக்கு கருத்தரிப்பு, பிரசவம், பாலூட்டுதல் போன்றவைகளினாலோ அல்லது வேறெந்த வகையிலாவது மேற்சொன்ன உடல்திரவங்களைச் சாரும்பொழுதோ ஏற்படக்கூடும்.

எயிட்சு தற்பொழுது ஒரு பரவல் தொற்று நோயாகும்[6]. 2007-ல் உலகமெங்கும் 33.2 மில்லியன் மக்கள் எயிட்சோடு வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் 330,000 குழந்தைகள் உட்பட 2.1 மில்லியன் மக்கள் இந்நோயினால் கொல்லப்பட்டிருப்பதாகவும் கணிக்கப்பட்டது[7]. இம்மரணங்களில் நான்கில் மூன்று பகுதி ஆப்பிரிக்காவின் சகாராவுக்கருகில் ஏற்பட்டு பொருளாதார வளர்ச்சியைக் குறைத்து மனித மூலதனத்தைச் சிதைத்திருக்கிறது[7].

மரபணு ஆராய்ச்சி 19 ஆம் நுற்றாண்டின் பிற்பகுதியிலோ 20 ஆம் நுற்றாண்டின் முற்பகுதியிலோ மேற்கு- மத்திய ஆப்பிரிக்காவில் எச்.ஐ.வி. தோன்றியிருக்கக் கூடும் என்பதைக் காட்டுகிறது[8],[9]. எயிட்சு முதன்முதலில் அமெரிக்காவின் நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களில் 1981-ல் கண்டறியப்பட்டது. 1980-களின் முற்பகுதியில் இந்நோய்க்கான காரணம் எச்.ஐ.வி. எனக் கண்டறியப்பட்டது[10].

எச்.ஐ.வி. எயிட்சுக்கான சிகிச்சை, நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த வல்லதாயிருந்தாலும் தற்சமயம் இந்நோய்க்கு தடுப்பூசியோ நிரந்தர தீர்வோ இல்லை. மீளூட்டுநச்சுயிரி எதிர்மருந்து எச்.ஐ.வி. நோயின் இறப்புவிகிதத்தையும், பாதிப்பு விகிதத்தையும் குறைக்க வல்லதாயிருந்தாலும் இம்மருந்துகள் விலையுயர்ந்தனவாகவும், கிடைப்பதற்கு அரியனவாகவும் இருப்பதால் அனைத்து நாடுகளிலும் வாடிக்கையாக கிடைப்பதில்லை[11]. இந்நோயை குணப்படுத்துவதற்கு உள்ள இத்தகைய இடர்பாடுகளால், நோய் வராமல் தடுத்தலே இப்பரவல் தொற்றுநோயைக் கட்டுபடுத்துவதிலுள்ள முக்கிய குறிக்கோள் எனக்கருதி வைரசின் பரவலைத் தடுக்க சுகாதார நிறுவனங்கள் பாதுகாப்பான உடலுறவையும், புதிய ஊசிகளை பயன்படுத்துதலின் அவசியத்தையும் வலியுறுத்துகின்றனர்.

இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள சுருக்கங்கள்
எயிட்சு  : பெறப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் குறைபாடுகளின் அறிகுறிகள்
எச்.ஐ.வி.  : மனிதனின் எதிர்ப்பாற்றல் குறைப்பு வைரசு
CD4+  : "சி.டி.4"+ "டி" உதவிச்செல்கள்
CCR5  : கீமோகைன் [[[கார்பன்]]-கார்பன் வடிவ அமைப்பு] ஏற்பி-5
CDC  : நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்
WHO  : உலக சுகாதார அமைப்பு
PCP  : நியுமோசிஸ்டிஸ் நுரையீரல் அழற்சி (நிமோனியா)
TB  : காசநோய்
MTCT  : தாயிலிருந்து பிள்ளைக்குப் பரவுதல்
HAART  : மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சை
STI/STD  : பால்வினை நோய்கள்

பொருளடக்கம்

Other Languages
Afrikaans: Vigs
Alemannisch: AIDS
አማርኛ: ኤድስ
aragonés: SIDA
العربية: إيدز
مصرى: ايدز
অসমীয়া: এইড্‌ছ
asturianu: SIDA
azərbaycanca: QİÇS
башҡортса: ВИЧ-инфекция
žemaitėška: AIDS
беларуская: СНІД
беларуская (тарашкевіца)‎: СНІД
বাংলা: এইডস
བོད་ཡིག: ཨེ་ཛིའི་ནད་
brezhoneg: SIDA
Mìng-dĕ̤ng-ngṳ̄: AIDS
کوردی: ئەیدز
čeština: AIDS
Чӑвашла: ЕИДП
Cymraeg: AIDS
dansk: AIDS
Deutsch: AIDS
Thuɔŋjäŋ: Adarwäl
Zazaki: AIDS
डोटेली: एड्स
ދިވެހިބަސް: އެއިޑްސް ބަލި
Ελληνικά: AIDS
English: HIV/AIDS
Esperanto: Aidoso
español: VIH/sida
eesti: AIDS
فارسی: ایدز
suomi: AIDS
Võro: AIDS
føroyskt: Eyðkvæmi
furlan: AIDS
Frysk: AIDS
Gaeilge: SEIF
贛語: 艾滋病
Gàidhlig: AIDS
galego: SIDA
ગુજરાતી: એઇડ્સ
Hausa: Kanjamau
עברית: איידס
हिन्दी: एड्स
Fiji Hindi: HIV/AIDS
Kreyòl ayisyen: Sida
magyar: AIDS
Հայերեն: ՁԻԱՀ
interlingua: SIDA
Bahasa Indonesia: AIDS
Ilokano: HIV/AIDS
íslenska: Alnæmi
italiano: AIDS
Patois: AIDS
Basa Jawa: AIDS
ქართული: შიდსი
Kabɩyɛ: Sidaa
Kongo: Sida
Gĩkũyũ: AIDS
қазақша: ЖИТС
ភាសាខ្មែរ: ជំងឺអេដស៍
ಕನ್ನಡ: ಏಡ್ಸ್ ರೋಗ
kurdî: AIDS
Latina: SCDI
Lëtzebuergesch: Aids
лезги: КъИДС
Limburgs: AIDS
lumbaart: AIDS
lingála: Sidá
ລາວ: ເອດສ໌
lietuvių: AIDS
latviešu: AIDS
मैथिली: एड्स
олык марий: НИДС
മലയാളം: എയ്‌ഡ്‌സ്‌
Malti: AIDS
မြန်မာဘာသာ: အေအိုင်ဒီအက်စ်
नेपाली: एड्स
नेपाल भाषा: एड्स
Nederlands: Aids
norsk nynorsk: Hiv/aids
norsk: Aids
occitan: SIDA
ਪੰਜਾਬੀ: ਏਡਜ਼
Papiamentu: Sida
پنجابی: ایڈز
پښتو: اېډز
română: SIDA
русиньскый: АІДС
संस्कृतम्: एइड्स्
саха тыла: СПИД
sicilianu: AIDS
Scots: HIV/AIDS
سنڌي: ايڊز
srpskohrvatski / српскохрватски: SIDA
සිංහල: ඒඩ්ස්
Simple English: AIDS
slovenčina: Aids
slovenščina: Aids
Soomaaliga: AIDS
shqip: AIDS
српски / srpski: Сида
Basa Sunda: AIDS
svenska: Aids
Kiswahili: Ukimwi
తెలుగు: ఎయిడ్స్
тоҷикӣ: СПИД
ไทย: เอดส์
Türkmençe: AIDS
Tagalog: AIDS
Türkçe: AIDS
Xitsonga: HIV/AIDS
татарча/tatarça: БИДС
chiTumbuka: AIDS
українська: СНІД
oʻzbekcha/ўзбекча: Orttirilgan immun tanqisligi sindromi
Tshivenda: CIDA
vèneto: AIDS
Tiếng Việt: HIV/AIDS
walon: Sida
Winaray: HIV/AIDS
მარგალური: შიდსი
ייִדיש: עידס
Vahcuengh: Bingh'aiswhbing
中文: 艾滋病
文言: 艾滋病
Bân-lâm-gú: AIDS
粵語: 愛滋病