உள்மனம்

உள்மனம், நனவிலி மனம் அல்லது நனவில் மனம்[1] (Unconscious mind அல்லது the unconscious) என்பது மனிதனின் மனதில் தானாகவே நடைபெறும் செயல் ஆகும். இது தற்சோதனைக்கு உட்படுத்த முடியாத ஒன்றாகும்.[2] மனிதனின் சிந்தனை, நினைவு, ஆர்வம், செயலூக்கம் ஆகிய மனதின் செயல்களுக்கு இதுவே காரணமாக அமைகிறது. மனதின் முழு உணர்வுநிலைக்கு அடுத்த கீழ்நிலையில் உள்மனம் இருந்தாலும் மனிதனின் நடத்தையில் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது. ஒரு மனிதனின் அடக்கிவைக்கப்பட்ட உணர்ச்சிகள், இயல்பான திறமைகள், அடிப்படைப் புலன்காணும்  உணர்வு (Perception), எண்ணங்கள், பழக்க வழக்கங்கள் முதலிவற்றின் தொகுப்பே உள்மனம் என்று ஆரய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.[2] இவைகளுடன் மெய்ப்புனைவுகள், இனந்தெரியாத அச்சங்கள் மற்றும் ஆசைகளும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மனநல மருத்துவ மேதை சிக்மண்ட் பிராய்டு மன இயக்கத்தை உள்மனம், இடைமனம், (Preconscious mind) புறமனம் (Conscious mind) என மூன்றாகப் பிரித்து, உள்மனம் என்னும் கருத்தை உருவாக்கினார்.[3] தொடக்காலத்தில் உள்மனம், இடைமனம், புறமனம் என்பன மனதின் மூன்று பிரிவுகளாகத்தான் கருதப்பட்டன. ஆனால் என்றும் அமைதியற்று இயங்கும் மனதை மூன்று பெட்டிகளாகப் பகுக்க கூடாது; அவை மன இயக்க நிலைகள் (Mental processes) என்றும் பிராய்டு கூறியுள்ளார். கனவுகள், நையாண்டி வேடிக்கப்பேச்சு, வார்த்தைகள் தடுமாற்றம் போன்றவைகளால் இவ்வுள்மனம் வெளிப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மனதின் மற்ற பாகங்களான உள்ளுணர்வு, உணர்வில்லாமலிருப்பதை ஒரு பழக்கமாகக் கொண்டிருப்பது, மற்றும் தெரிந்திருப்பது (Awareness) போன்றவை மனதின் உணர்வுத்தன்மை மீது தாக்கத்தை ஏற்படுத்தும். தூங்கும்பொழுது நடப்பது, கனவு காண்பது மற்றும் மயக்க வெறி (Delirium), புலன் மரத்த நிலை (Coma) முதலியவை உள் மனம் இருப்பதற்கு அறிகுறிகளாகக் கொள்ளப்படுகின்றன. ஆனால் இவையே உள்மனம் அல்ல.

வரலாறு

உள்மனம் என்பதற்கான சொல் -ஆங்கிலம்:unconscious, இடாய்ச்சு: Unbewusste, 18 ஆம் நூற்றண்டில் செர்மானிய தத்துவ அறிஞர் ப்ரெடெரிக் செல்லிங்கு (Friedrich Schelling) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டு கவிஞர், கட்டுரையாளர் சேமுவல் டெய்லர் கோலிரிட்சு (Samuel Taylor Coleridge) என்பவரால் ஆங்கிலத்தில் எடுத்தாளப்பட்டுள்ளது.[4][5] 18 ஆம் நூற்றாண்டின் செர்மானிய மருத்துவர் தத்துவ அறிஞர் எர்னெச்டு பிலாண்டெர் (Ernst Platner) அபூர்வமாகப் பயன்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் உள்ளன. உள்மன எண்ணங்களுக்கு அப்பாற்பட்டு, ஐம்புலன்களின் தாக்கத்தினால் தூண்டப்படும் ஆசைகள், எண்ணங்கள் மற்றும் செயல்களை நெறிப்படுத்த ஆன்மிகம் மற்றும் கடவுள் குறித்த எண்ணங்களில் ஈடுபடுவது என்பன பற்றிய கருத்துக்கள் தொன்று தொட்டே இருந்து வந்துள்ளது. உள்மனம் குறித்த கருத்துக்கள் கிருத்து பிறப்பதற்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பே இந்து சமய வேதங்களிலும் ஆயுர்வேத நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.[6][7][8] வில்லியம் சேக்சுபியர் உள்மனம் என்று குறிப்பிடமலேயே இது குறித்து அவரது நாடகங்களில் பரவலாகப் பேசியுள்ளார்.[9] மேற்கத்திய தத்துவ அறிஞர்கள் ஆர்தர் சுகோபென்கர் (Arthur Schopenhauer), பறுச் சிபினோச (Baruch Spinoza), கோட்பிரீட் லைப்னிட்ஸ், யோஃகான் ஃவிக்டெ, எகல், சோரென் கிரிகிகார்டு (Søren Kierkegaard) , பிரீட்ரிக் நீட்சே ஆகியோரும் உள்மனம் என்னும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர்.[10]

Other Languages
Alemannisch: Das Unbewusste
العربية: عقل باطن
অসমীয়া: অচেতন মন
asturianu: Inconsciente
български: Несъзнавано
বাংলা: অচেতন মন
català: Inconscient
čeština: Nevědomí
Ελληνικά: Ασυνείδητο
Esperanto: Nekonscio
español: Inconsciente
eesti: Alateadvus
euskara: Inkontziente
français: Inconscient
Frysk: Unbewuste
galego: Inconsciente
עברית: לא-מודע
magyar: Tudattalan
հայերեն: Անգիտակցական
íslenska: Dulvitund
italiano: Inconscio
日本語: 無意識
қазақша: Бейсаналық
한국어: 무의식
Кыргызча: Бейаңдуулук
lietuvių: Pasąmonė
македонски: Несвен ум
Bahasa Melayu: Pemikiran bawah sedar
Nederlands: Onbewuste
occitan: Inconscient
português: Inconsciente
română: Inconștient
sicilianu: Ncuscenza
Simple English: Unconscious mind
slovenčina: Nevedomie
српски / srpski: Несвесно
тоҷикӣ: Бешуурӣ
українська: Несвідоме
Tiếng Việt: Vô thức
中文: 潛意識