உலகப் பாரம்பரியக் களம்

யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவிற்கான இலச்சினை
களம் #86: எகிப்து நாட்டில் மெம்பிசு பகுதியும், அங்கே உள்ள கிசா பிரமிடுத் தொகுதியும்
களம் #114: பெர்செபோலிசு, ஈரான்
களம் #174: பிளாரென்சின் வரலாற்று மையம், ( இத்தாலி)
களம் #129: மாயன் கோபன் ( ஹொண்டுராஸ்)
களம் #447: உலுரு-கடா தேசியப் பூங்கா, ( ஆத்திரேலியா)
களம் #540: சென் பீட்டர்ஸ்பேர்க் வரலாற்று மையமும் அதன் சுற்றுப்புரமும் ( உருசியா)
களம் #705: ஊடங் மலைப்பகுதியில் உள்ள பண்டை கட்டிட வளாகம் ( சீனா)
களம் #723: பெனா தேசிய அரண்மனை மற்றும் சின்ட்ரா ( போர்த்துகல்)
களம் #800: கென்யா மலை தேசியப் பூங்கா ( கென்யா)
பரிந்துரைக்கப்பட்ட களத்திற்கான ஒரு காட்டு: தாதேவ் துறவியர் மடம் ( ஆர்மீனியா)

உலகப் பாரம்பரியக் களம் (World Heritage Site) என்பது, யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவினால் நிர்வகிக்கப்படும் அனைத்துலக உலக பாரம்பரியங்கள் திட்டத்தின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு களம் ஆகும். இது, காடு, மலை, ஏரி, பாலைவனம், நினைவுச் சின்னம், கட்டிடம், நகரம் போன்ற எதுவாகவும் இருக்கலாம் [1]. யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழு, நாடுகளின் பொதுக் குழுவினால் தெரிவு செய்யப்படுவதுடன் 21 பிரதிநிதிகளைக் கொண்டிருக்கும் [2] [3]

மனித இனத்தின் பொதுப் பாரம்பரியத்துக்கு இன்றியமையாத இயற்கை மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் கொண்ட களங்களைப் பட்டியலிட்டு, அவற்றைப் பாதுகாப்பதே இத் திட்டத்தின் நோக்கமாகும். சில களங்களின் மேம்பாட்டுக்காக, சில நடைமுறைகளின் கீழ், உலக பாரம்பரிய நிதியத்தில் இருந்து நிதி உதவி வழங்கப்படுவதும் உண்டு. இவ்வாறான களங்களைப் பாதுகாக்கும் நோக்குடன், 16 நவம்பர் 1972 ஆம் ஆண்டில் நடந்த யுனெஸ்கோவின் பொது மாநாட்டில் கொண்டு வரப்பட்ட சாசனத்தில், [4] இத்திட்டம் உருவாக்கப்பட்டது. செப்டம்பர் 2012 அறிக்கையின்படி, இத் திட்டத்தில் இதுவரை 190 நாடுகள் கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்டுள்ளன [5].

2012 ஆம் ஆண்டு நிலவரப்படி இது வரை 962 களங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 157 நாடுகளில் அமைந்துள்ள இக்களங்களில், 745 பண்பாட்டுக் களங்களும், 188 இயற்கைசார் களங்களும், 29 கலப்பு இயல்புக் களங்களும் அடங்குகின்றன. [6] [7]. போர்க்காலங்களிலும் இந்தச் சின்னங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தக் கூடாது என்பது இதன் முக்கிய அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. பாரம்பரியத்துக்கு இன்றியமையாத இயற்கை மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான களங்களைப் பட்டியலிட்டு, அவற்றைப் பாதுகாப்பதே இத்திட்டத்தின் முக்கியமான நோக்கமாகும் [8].

இத்தாலியிலேயே அதிகளவு உலகப் பாரம்பரியக் களங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. யுனெஸ்கோ ஒவ்வொரு பாரம்பரியக் களத்திற்கும் ஒவ்வொரு அடையாள இலக்கத்தை வழங்கி வருகின்றது. புதிதாக பட்டியலிடப்படும் களங்களில் சில பழைய பட்டியலிலும் இடம் பெற்றிருப்பதனால், அடையாள இலக்கங்களின் எண்ணிக்கை 1200 ஐ விட அதிகமாக இருப்பினும், களங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. குறிப்பிட்ட களங்கள் அந்தந்த நாட்டின் சட்டப்படியான எல்லைக்குள் இருப்பினும், இவை ஒவ்வொன்றையும் பாதுகாப்பது உலக சமூகத்தின் கடமை என யுனெஸ்கோ கருதுகின்றது.

வரலாறு

ஐக்கிய அமெரிக்காவில் 1872ஆம் ஆண்டில் யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா நிறுவப்பட்டது; இதுவே நூறாண்டுகள் கழித்து, நிக்சனின் நிர்வாகத்தின்போது, 1972ஆம் ஆண்டில் அமெரிக்க அரசால் 'உலக பாரம்பரிய அறக்கட்டளைக்கு' பரிந்துரைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுவே உலகளவில் தேசியப் பூங்கா கருத்தாக்கத்துக்கு அடிப்படையாக அமைந்தது. [9]

1954ஆம் ஆண்டில் எகிப்திய அரசு அஸ்வான் அணை கட்ட முடிவெடுத்தபோது அதன் நீர்பிடிப்புப் பகுதியிலிருந்த பள்ளத்தாக்கில் அபு சிம்பெல் கோவில்கள் போன்ற பல பண்டைய எகிப்தின் பொக்கிசங்கள் மூழ்குவதாக இருந்தது. அப்போது இவற்றைக் காத்திட யுனெசுக்கோ உலகளவில் பெரும் விழிப்புணர்வுப் பிரசாரத்தை மேற்கொண்டது. அபு சிம்பெல் மற்றும் பிலே கோவில்கள் கல், கல்லாக பெயர்க்கப்பட்டு உயரமான பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மீண்டும் கட்டமைக்கப்பட்டது. தெண்டூர் கோவில் இதேபோல நியூ யார்க்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. [10]

இந்தத் திட்டத்திற்கு US$ 80 மில்லியன் செலவானது; இதில் ஏறத்தாழ $ 40 மில்லியன் செலவை 50 நாடுகள் ஏற்றுக்கொண்டன. இத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து இத்தாலியில் வெனிஸ், பாக்கித்தானில் மொகெஞ்சதாரோ மற்றும் இந்தோனேசியாவில் போரோபுதூர் கோவில் வளாகங்களையும் பாதுகாக்க பன்னாட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டன. யுனெசுக்கோ, நினைவுச்சின்னங்களுக்கும் களங்களுக்குமான அனைத்துலக அவையுடன் இணைந்து, மனித இனத்தின் பொதுவான பண்பாட்டுப் பாரம்பரியத்தைக் காப்பதற்கான சாசன முன்வரைவு ஒன்றை உருவாக்கியது.

Other Languages
Alemannisch: UNESCO-Welterbe
azərbaycanca: Ümumdünya irsi
Boarisch: UNESCO-Wödeabe
беларуская (тарашкевіца)‎: Сусьветная спадчына ЮНЭСКО
brezhoneg: Glad bedel
客家語/Hak-kâ-ngî: Sṳ-kie Vì-sán
hornjoserbsce: Swětowe herbstwo
Bahasa Indonesia: Situs Warisan Dunia UNESCO
日本語: 世界遺産
қазақша: Әлемдік мұра
한국어: 세계유산
Lëtzebuergesch: Weltierfschaft
монгол: Дэлхийн өв
Bahasa Melayu: Tapak Warisan Dunia
Plattdüütsch: List vun dat Weltarv
Nedersaksies: Wealdarfgoodlieste
Nederlands: Werelderfgoed
norsk nynorsk: Verdsarv
саха тыла: Аан дойду Утума
srpskohrvatski / српскохрватски: Svjetska baština
Simple English: World Heritage Site
српски / srpski: Светска баштина
Basa Sunda: Loka Warisan Dunya
svenska: Världsarv
Kiswahili: Urithi wa Dunia
Türkçe: Dünya Mirası
татарча/tatarça: Бөтендөнья мирасы
Tiếng Việt: Di sản thế giới
吴语: 世界遗产
中文: 世界遗产
粵語: 世界遺產