உருசியா
English: Russia

ரஷ்யக் கூட்டரசு
Российская Федерация
Rossiyskaya Federatsiya
கொடி சின்னம்
நாட்டுப்பண்: 
(உருசியக் கூட்டரசின் நாட்டுப்பண்)
தலைநகரம்மாஸ்கோ
55°45′N 37°37′E / 55°45′N 37°37′E / 55.750; 37.617
பெரிய நகர் தலைநகரம்
ஆட்சி மொழி(கள்) உருசியம் நாடு முழுவதும் அதிகாரபூர்வ மொழியாகவும்; 27 வேறு மொழிகள் பல்வேறு பிராந்தியங்களில் இணை அதிகாரபூர்வ மொழியாகவும் உள்ளன.
இனக் குழு (2010) 81% உருசியர்
3.7% தடரர்
1.4% உக்ரேனியர்
1.1% பசுகிரர்
1% சுவாசர்
11.8% ஏனையோரும் குறிப்பிடப்படாதோரும்[1]
மக்கள் உருசியர்
அரசாங்கம் கூட்டாட்சி அரை சனாதிபதி அரசியலமைப்புக் குடியரசு
 •  சனாதிபதி விளாதிமிர் பூட்டின்
 •  பிரதமர் மிகைல் மிசூசுத்தின்
சட்டமன்றம் Federal Assembly
 •  மேலவை Federation Council
 •  கீழவை State Duma
உருவாக்கம்
 •  ரூரிக் வம்சம் 862 
 •  கீவிய ரசியா 882 
 •  விளாடிமிர்-சுஸ்டால் ரசியா 1169 
 •  மொஸ்கோவின் பெரும் டச்சி 1283 
 •  ரசியாவில் சார் ஆட்சி 16 சனவரி 1547 
 •  உருசியப் பேரரசு 22 ஓக்டோபர் 1721 
 •  உருசிய சோவியத் கூட்டரச சோசலிச குடியரசு 7 நவம்பர் 1917 
 •  சோவியத் ஒன்றியம் 10 டிசம்பர் 1922 
 •  ரஷ்யக் கூட்டரசு 25 டிசம்பர் 1991 
பரப்பு
 •  மொத்தம் 1,70,75,400 கிமீ2 (1வது)
65,92,800 சதுர மைல்
 •  நீர் (%) 13[2] (சேற்றுநிலங்கள் உட்பட)
மக்கள் தொகை
 •  2012 கணக்கெடுப்பு 143,200,000[3] (9வது)
 •  அடர்த்தி 8.3/km2 (217வது)
21.5/sq mi
மொ.உ.உ (கொஆச) 2011 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $2.383 திரில்லியன்[4]
 •  தலைவிகிதம் $16,736[4]
மொ.உ.உ (பெயரளவு) 2011 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $1.850 திரில்லியன்[4]
 •  தலைவிகிதம் $12,993[4]
ஜினி (2008)42.3[5] (83வது)
Error: Invalid Gini value
மமேசு (2011)Green Arrow Up Darker.svg 0.755[6]
Error: Invalid HDI value · 66வது
நாணயம் ரூபிள் (RUB)
நேர வலயம் (ஒ.அ.நே+3 to +12 (exc. +5))
திகதி அமைப்பு dd.mm.yyyy
வாகனம் செலுத்தல் right
அழைப்புக்குறி +7
இணையக் குறி .ru, .su, .рф

உருசியா (Russia) அல்லது இரசியா என்பது வடக்கு யூரேசியாவில் அமைந்துள்ள உலகிலேயே நிலப்பரப்பில் யாவற்றினும் மிகப்பெரிய நாடாகும்.[7] இந்நாட்டின் முறைப்படியான பெயர் உருசியக் கூட்டமைப்பு என்பதாகும். தமிழில் இரசியா, இரச்சியா என்றும், ருஷ்யா என்னும் பெயர்களாலும் குறிக்கப்படுவது உண்டு.

உருசிய மொழியில் இது Росси́йская Федера́ция (Rossiyskaya Federatsiya அல்லது ரசீஸ்க்கய ஃபெதராத்சியா) அல்லது சுருக்கமாக உருசியா (உருசிய மொழியில்: Росси́я, ஆங்கில ஒலிபெயர்ப்பு: Rossiya அல்லது Rossija) என அழைக்கப்படுகிறது. ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களின் பெரு நிலப்பரப்பில் மிகவிரியும் ஒரு பெரும் நாடாக விளங்கும் இந்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 17,075,200 சதுரக் கிலோமீட்டர். பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியலைப் பார்த்தால், உருசியாவின் பரப்பளவு அடுத்த பெரிய நாடான கனடாவின் நிலப்பரப்பைக் காட்டிலும் இது இரு மடங்கு அதிகமாகும். உருசியா, மக்கள்தொகை அடிப்படையில் உலகில் எட்டாவது இடம் வகிக்கிறது. ஏறத்தாழ 143-145 மில்லியன் மக்கள் (2002ன் கணக்கெடுப்பின் படி மக்கள்தொகை 145,513,037) இந்நாட்டில் வாழ்கிறார்கள். ஏறக்குறைய வட ஆசியா முழுவதையும் மற்றும் 40% ஐரோப்பா பகுதிகளையும் உள்ளடக்கியது. 11 விதமான கால வேறுபாடுகளை (Time zone) யும், பரந்த வேறுபட்ட நிலப்பரப்பையும் கொண்டது. உருசியா உலகிலேயே அதிகமான அளவு காட்டு ஒதுக்கங்களைக் (8,087,900 ச. கிமீ) கொண்டுள்ளதுடன், இங்குள்ள ஏரிகள் உலக நன்னீர் நிலைகளின் பரப்பளவில் நான்கில் ஒரு பாகமாகவும் உள்ளன.[8] உலகின் மிகக் கூடிய கனிம வளங்களும் ஆற்றல் வளங்களும் உருசியாவிலேயே உள்ளதுடன்[9] உலகின் மிகப் பெரிய எண்ணெய், இயற்கை வாயு ஆகியவற்றை உற்பத்தி செய்யும் நாடாகவும் விளங்குகிறது.[10][11] உருசியா, பின்வரும் நாடுகளுடன் தன் நில எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது (வடமேற்கிலிருந்து தென்கிழக்கு முகமாக): நார்வே, பின்லாந்து, எஸ்டோனியா, லத்வியா, லித்துவானியா, போலந்து, பெலாரஸ், உக்ரைன், ஜார்ஜியா, அசர்பைஜான், கசகஸ்தான், சீனா, மங்கோலியா மற்றும் வட கொரியா.

உருசியாவின் வரலாறு, கி.பி 3ம் முதல் 8ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க ஒரு குழுவினராக உருவாகிய கிழக்கு சிலேவ் என்னும் பூர்வகுடிமக்களுடன் தொடங்குகிறது.[12] அதன் பிறகு இப் பகுதியில், வைக்கிங் என்னும் மறக் குடியினர் 9வது நூற்றாண்டில் "ருஸ்" என்னும் நடுக் கால நாட்டை உருவாக்கி ஆண்டு வந்தனர். 988 ஆம் ஆண்டில், இந்த அரசு பைசன்டியப் பேரரசிடம் இருந்து பெற்ற பழமைக் கோட்பாட்டுக் கிறித்தவத்தைத் தழுவிக்கொண்டது.[13] இது, பைசன்டியப் பண்பாடும், சிலாவியப் பண்பாடும் இணைந்து, அடுத்த ஆயிரவாண்டு காலத்தில் இடம்பெற்ற உருசியப் பண்பாட்டு வளர்ச்சியின் தொடக்கமாக அமைந்தது.[13] சில காலங்களின் பின் "ருஸ்" நாடு பல சிறிய நாடுகளாகச் சிதைவுற்றது. இவற்றுட் பலவற்றைக் கைப்பற்றிக்கொண்ட மங்கோலியர் அவற்றைத் தமது சிற்றரசுகளாக ஆக்கிக்கொண்டனர்.[14] பின்னர், மாசுக்கோ பெரும் டச்சி (Grand Duchy of Moscow) படிப்படியாக அருகில் இருந்த "ருஸ்" சிற்றரசுகளையும் ஒன்றிணைத்து விடுதலை பெற்றுக்கொண்டு "கீவிய ருஸ்" பகுதியின் பண்பாட்டு, அரசியல் மரபுகளின் முன்னணிச் சக்தியாக உருவானது. பிற நாடுகளைக் கைப்பற்றுவது மூலமும், பிற நிலப் பகுதிகளை இணைத்துக் கொள்வதன் மூலமும் பெருமளவு விரிவடைந்த இது 18 ஆம் நூற்றாண்டில் உருசியப் பேரரசாக உருவானது. வரலாற்றில் மூன்றாவது பெரிய பேரரசான இது, ஐரோப்பாவின் போலந்து முதல் வட அமெரிக்காவில் உள்ள அலாசுக்கா வரை பரந்து இருந்தது.[15][16]

உருசியா கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் உருசியப் பேரரசாகவும், சோவியத் ஒன்றியம் மூலமாகவும் உலகின் வல்லரசுகளில் ஒன்றாக வளர்ந்தது. 1917ல் உருசியப் புரட்சியைத் தொடர்ந்து உலகின் முதல் அரசியல் சட்ட சோசலிச நாடாக உருவான 15 குடியரசுகளை உள்ளடக்கிய சோவியத் யூனியனில் பெரிய பகுதியாகவும் முன்னணி உறுப்பாகவும் உருசியா இருந்தது.[17] சோவியத் ஒன்றியம் உலகின் முதல் மற்றும் பெரிய ஜனநாயக சோசலிச நாடாகும். அப்போதைய இரண்டு வல்லரசுகளில் ஒன்றாகவும் இருந்தது. இரண்டாம் உலகப் போரில் கூட்டுப் படைகளின் வெற்றியில் சோவியத் ஒன்றியத்தின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது.[18][19] சோவியத் ஒன்றியக் காலத்தில் 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் குறிப்பிடத்தக்க பல தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டன. உலகின் முதலாவது மனித விண்வெளிப் பறப்பும் இவற்றுள் அடங்கும். 1991ல் சோவியத் யூனியன் கலைக்கப்படடதால் பிறகு மீண்டு உருசியா குடியரசாக உருவானது. எனினும், உருசியாவே கலைக்கப்பட்ட சோவியத் ஒன்றியத்தின் சட்டத் தொடர்ச்சியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

உருசியப் பொருளாதாரம் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் ஒன்பதாவது பெரியதாகவும், வாங்கும் திறன் சமநிலையின் அடிப்படையில் ஆறாவது பெரியதாகவும் உள்ளது. இதன் படைத்துறைக்கான பெயரளவு வரவு செலவு உலகின் மூன்றாவது பெரிதாகும். இது உலகில் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார சக்திகளுள் ஒன்று. உலகின் ஏற்றுக்கொள்ளப்பட்ட அணுவாயுத நாடுகளில் ஒன்றான உருசியா உலகின் மிகப் பெரிய பேரழிவு ஆயுதச் சேமிப்பையும் கொண்டுள்ளது. உருசியா ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளுள் ஒன்றாக உள்ளதுடன், ஜி8, ஜி20, ஐரோப்பிய அவை, ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு, சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, யூரேசிய பொருளாதாரச் சமூகம், ஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பு, உலக வணிக அமைப்பு ஆகியவற்றிலும் உறுப்பு நாடாக இருந்து வருகிறது.

Other Languages
Аҧсшәа: Урыстәыла
Acèh: Rusia
адыгабзэ: Урысые
Afrikaans: Rusland
Akan: Rɔhyea
Alemannisch: Russland
አማርኛ: ሩሲያ
aragonés: Rusia
Ænglisc: Russland
العربية: روسيا
ܐܪܡܝܐ: ܪܘܣܝܐ
مصرى: روسيا
অসমীয়া: ৰাছিয়া
asturianu: Rusia
Aymar aru: Rusiya
azərbaycanca: Rusiya
تۆرکجه: روسیه
Bali: Rusia
Boarisch: Russland
žemaitėška: Rosėjė
Bikol Central: Rusya
беларуская: Расія
беларуская (тарашкевіца)‎: Расея
български: Русия
भोजपुरी: रूस
Bislama: Rusia
Banjar: Rusia
bamanankan: Risila
বাংলা: রাশিয়া
བོད་ཡིག: ཨུ་རུ་སུ།
বিষ্ণুপ্রিয়া মণিপুরী: রাশিয়া
brezhoneg: Rusia
bosanski: Rusija
ᨅᨔ ᨕᨘᨁᨗ: Russia
català: Rússia
Chavacano de Zamboanga: Rusia
Mìng-dĕ̤ng-ngṳ̄: Ngò̤-lò̤-sṳ̆
нохчийн: Росси
Cebuano: Rusya
Chamoru: Russia
ᏣᎳᎩ: ᏲᏂᎢ
Tsetsêhestâhese: Russia
کوردی: ڕووسیا
corsu: Russia
qırımtatarca: Rusiye
čeština: Rusko
kaszëbsczi: Ruskô
словѣньскъ / ⰔⰎⰑⰂⰡⰐⰠⰔⰍⰟ: Рѡсїꙗ
Cymraeg: Rwsia
dansk: Rusland
Deutsch: Russland
Thuɔŋjäŋ: Ruccia
Zazaki: Rusya
dolnoserbski: Rusojska
डोटेली: रूस
ދިވެހިބަސް: ރޫސީވިލާތް
eʋegbe: Russia
Ελληνικά: Ρωσία
emiliàn e rumagnòl: Rossia
English: Russia
Esperanto: Rusio
español: Rusia
eesti: Venemaa
euskara: Errusia
estremeñu: Russia
فارسی: روسیه
Fulfulde: Roosiya
suomi: Venäjä
Võro: Vinnemaa
Na Vosa Vakaviti: Rusi
føroyskt: Russland
français: Russie
arpetan: Russie
Nordfriisk: Ruslun
furlan: Russie
Frysk: Ruslân
Gaeilge: An Rúis
Gagauz: Rusiya
贛語: 俄羅斯
kriyòl gwiyannen: Risi
Gàidhlig: An Ruis
galego: Rusia
گیلکی: رۊسیه
Avañe'ẽ: Rrúsia
गोंयची कोंकणी / Gõychi Konknni: रूस
𐌲𐌿𐍄𐌹𐍃𐌺: 𐍂𐌿𐍃𐌰𐌻𐌰𐌽𐌳
ગુજરાતી: રશિયા
Gaelg: Yn Roosh
Hausa: Rasha
客家語/Hak-kâ-ngî: Ngò-lò-sṳ̂
Hawaiʻi: Rūsia
עברית: רוסיה
हिन्दी: रूस
Fiji Hindi: Russia
hrvatski: Rusija
hornjoserbsce: Ruska
Kreyòl ayisyen: Risi
magyar: Oroszország
հայերեն: Ռուսաստան
Արեւմտահայերէն: Ռուսիա
interlingua: Russia
Bahasa Indonesia: Rusia
Interlingue: Russia
Iñupiak: Russia
Ilokano: Rusia
ГӀалгӀай: Россе Федераци
Ido: Rusia
íslenska: Rússland
italiano: Russia
ᐃᓄᒃᑎᑐᑦ/inuktitut: ᐅᓛᓴ
日本語: ロシア
Patois: Rosha
la .lojban.: rukygu'e
Jawa: Ruslan
ქართული: რუსეთი
Qaraqalpaqsha: Rossiya
Taqbaylit: Rusya
Адыгэбзэ: Урысей
Kabɩyɛ: Ruusii
Kongo: Rusia
Gĩkũyũ: Racia
қазақша: Ресей
kalaallisut: Ruslandi
ភាសាខ្មែរ: រុស្ស៊ី
ಕನ್ನಡ: ರಷ್ಯಾ
한국어: 러시아
Перем Коми: Рочму
къарачай-малкъар: Россия Федерация
कॉशुर / کٲشُر: روٗس
kurdî: Rûsya
коми: Рочму
kernowek: Russi
Кыргызча: Орусия
Latina: Russia
Ladino: Rusia
Lëtzebuergesch: Russland
лакку: Аьрасат
лезги: Урусат
Lingua Franca Nova: Rusia
Luganda: Rwasha
Limburgs: Róslandj
Ligure: Rùscia
lumbaart: Rüssia
lingála: Rusí
لۊری شومالی: رۊسیٱ
lietuvių: Rusija
latgaļu: Krīveja
latviešu: Krievija
मैथिली: रूस
Basa Banyumasan: Rusia
мокшень: Рузмастор
Malagasy: Rosia
олык марий: Россий
Māori: Rūhia
Minangkabau: Rusia
македонски: Русија
മലയാളം: റഷ്യ
मराठी: रशिया
кырык мары: Россий
Bahasa Melayu: Rusia
Malti: Russja
Mirandés: Rússia
မြန်မာဘာသာ: ရုရှားနိုင်ငံ
مازِرونی: روسیه
Dorerin Naoero: Ratsiya
Nāhuatl: Rusia
Napulitano: Russia
Plattdüütsch: Russland
Nedersaksies: Ruslaand
नेपाली: रुस
नेपाल भाषा: रुस
Nederlands: Rusland
norsk nynorsk: Russland
norsk: Russland
Novial: Rusia
Nouormand: Russie
Sesotho sa Leboa: Russia
Chi-Chewa: Russia
occitan: Russia
Livvinkarjala: Ven'a
Oromoo: Raashiyaa
ଓଡ଼ିଆ: ଋଷିଆ
Ирон: Уæрæсе
ਪੰਜਾਬੀ: ਰੂਸ
Pangasinan: Rusia
Kapampangan: Rusia
Papiamentu: Rusia
Picard: Russie
Deitsch: Russland
Pälzisch: Russland
पालि: रूस
Norfuk / Pitkern: Rusha
polski: Rosja
Piemontèis: Russia
پنجابی: روس
Ποντιακά: Ρουσία
پښتو: روسیه
português: Rússia
Runa Simi: Rusya
rumantsch: Russia
romani čhib: Rusiya
Kirundi: Uburusiya
română: Rusia
armãneashti: Arusia
tarandíne: Russie
русский: Россия
русиньскый: Росія
Kinyarwanda: Uburusiya
संस्कृतम्: रास्या
саха тыла: Арассыыйа
ᱥᱟᱱᱛᱟᱲᱤ: ᱨᱟᱥᱤᱭᱟ
sardu: Rùssia
sicilianu: Russia
Scots: Roushie
سنڌي: روس
davvisámegiella: Ruošša
Sängö: Rusïi
srpskohrvatski / српскохрватски: Rusija
සිංහල: රුසියාව
Simple English: Russia
slovenčina: Rusko
slovenščina: Rusija
Gagana Samoa: Rusia
Soomaaliga: Ruushka
shqip: Rusia
српски / srpski: Русија
Sranantongo: Rusland
SiSwati: IRashiya
Sesotho: Rashea
Seeltersk: Ruslound
Sunda: Rusia
svenska: Ryssland
Kiswahili: Urusi
ślůnski: Rusyjo
Sakizaya: Russia
ತುಳು: ರಷ್ಯಾ
తెలుగు: రష్యా
tetun: Rúsia
тоҷикӣ: Русия
ትግርኛ: ራሻ
Türkmençe: Russiýa
Tagalog: Rusya
Setswana: Russia
lea faka-Tonga: Lūsia
Tok Pisin: Rasia
Türkçe: Rusya
Xitsonga: Rhaxiya
татарча/tatarça: Русия
chiTumbuka: Russia
Twi: Rɔhyia
reo tahiti: Rūtia
тыва дыл: Россия
удмурт: Россия
ئۇيغۇرچە / Uyghurche: روسىيە
українська: Росія
اردو: روس
oʻzbekcha/ўзбекча: Rossiya
Tshivenda: Rashia
vèneto: Rusia
vepsän kel’: Venäma
Tiếng Việt: Nga
West-Vlams: Rusland
Volapük: Rusän
walon: Rûsseye
Winaray: Rusya
Wolof: Riisi
吴语: 俄罗斯
isiXhosa: IRashiya
მარგალური: რუსეთი
ייִדיש: רוסלאנד
Yorùbá: Rọ́síà
Vahcuengh: Ngozlozswh
Zeêuws: Rusland
中文: 俄罗斯
文言: 俄羅斯
Bân-lâm-gú: Lō͘-se-a
粵語: 俄羅斯
isiZulu: IRashiya