இயற்பியலுக்கான நோபல் பரிசு

இயற்பியலுக்கான நோபல் பரிசு
Nobel Prize.png
வழங்கியவர்இயற்பியலில் தலைசிறந்த கண்டுபிடிப்பு-பங்களிப்புக்கு
நாடுhttp://nobelprize.org
முதன்முதலாக இயற்பியல் நோபெல் பரிசுபெற்ற வில்லெம் ரோண்ட்டெகென்(Wilhelm Röntgen) (1845–1923).

இயற்பியலுக்கான நோபல் பரிசு (Nobel Prize in Physics, சுவீடிய: Nobelpriset i fysik), ஆண்டுதோறும் சுவீடன் அறிவியல்களுக்கான வேந்திய உயர்கல்விப் பேரவை வழங்குகின்றது. ஆண்டுதோறும் வழங்கப்பெறும் நோபெல் பரிசுகள் ஐந்தில் இயற்பியல் பரிசும் ஒன்று. ஆல்ஃபிரட் நோபெல் என்பார் 1895 இல் நிறுவிய இப்பரிசு 1901 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகின்றது. மற்ற நோபெல் பரிசுகள் வேதியியல் நோபல் பரிசு, இலக்கிய நோபல் பரிசு, உடலியக்கவியல் மருத்துவ நோபல் பரிசு, அமைதிக்கான நோபல் பரிசு ஆகியவை. இயற்பியலுக்கான நோபெல் பரிசை முதன்முதலாக இடாய்ச்சுலாந்து (செருமன்) நாட்டைச் சேர்ந்த நோபெல் நிறுவனம் செயற்படுத்துகின்றது. இப்பரிசு இயற்பியலுக்காக வழங்கப்பெறும் மிகுபெருமை வாய்ந்த தலைசிறந்த பரிசாகக் கருதப்படுகின்றது. இப்பரிசு ஆண்டுதோறும் இசுட்டாகோமில் (Stockholm) நோபெல் இறந்த ஆண்டுநிறைவு நாளான திசம்பர் 10 அன்று வழங்கப்பெறுகின்றது.

பின்புலம்

ஆல்ஃபிரட் நோபெல், தன்னுடைய கடைசி உயிலில் அவருடைய பணத்தை மாந்த குலத்துக்கு யாவற்றினும் மிகுந்த நன்மை தரும் இயற்பியல், வேதியியல், உடலியக்கவியல் அல்லது மருத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளில் கண்டுபிடிப்புகள், படைப்புகள் செய்தவர்களுக்கும், அமைதிக்கு உழைத்தவர்களுக்கும் பரிசுகள் உருவாக்கித் தருமாறு பணித்திருந்தார்[1][2] ஆல்ஃபிரட் நோபெல் பல உயில்கள் எழுதியிருந்தாலும், கடைசியாக தான் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன் அவர் எழுதி பாரிசில் உள்ள சுவீடன்-நோர்வே கிளப்பில் (Swedish-Norwegian Club) நவம்பர் 27, 1895 அன்று கையெழுத்திட்ட அதுவே கடைசி உயில்[3][4] நோபெல் தன்னுடைய மொத்த சொத்தில் 94% ஐ, 31 mமில்லியன் சுவீடன் குரோனார் (Swedish kronor) (2008 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி அமெரிக்க டாலர் $186 மில்லியன்) பணத்தை ஐந்து பரிசுகள் நிறுவ விட்டுச்சென்றார்.[5] உயிலில் இருந்த ஐயப்பாடுகளால் ஏப்பிரல் 26, 1897 அன்றுதான் நோர்வேயின் நாடாளுமன்றம் ("இசுட்டோர்ட்டிங்" Storting) ஒப்புதல் அளித்தது[6][7] இந்த உயிலைச் செயற்படுத்தியவர்கள் ராகுநர் சோல்மன் (Ragnar Sohlman), ருடோல்ப் லில்யெக்கிசுட்டு (Rudolf Lilljequist). இவர்கள் இருவரும் நோபெல் கூறிய பரிசுகளை வழங்க ஏற்பாடு செய்ய நோபெல் நிறுவனத்தை உருவாக்கினர்.

Other Languages
беларуская (тарашкевіца)‎: Нобэлеўская прэмія ў галіне фізыкі
Bahasa Indonesia: Penghargaan Nobel Fisika
Lëtzebuergesch: Nobelpräis fir Physik
Plattdüütsch: Nobelpries för Physik
norsk nynorsk: Nobelprisen i fysikk
português: Nobel de Física
srpskohrvatski / српскохрватски: Nobelova nagrada za fiziku
oʻzbekcha/ўзбекча: Fizika boʻyicha Nobel mukofoti
Tiếng Việt: Giải Nobel Vật lý