இயற்கை வேளாண்மை

இயற்கை வேளாண்மை அல்லது அங்கக வேளாண்மை (organic farming) என்பது செயற்கை உரம், செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை வளர்ச்சி ஊக்கிகள், உயிர் எதிரி கொண்ட எச்சங்கள் (கோழி மற்றும் கால்நடை), மரபணு மாற்றப்பட்ட உயிரினம் மற்றும் மனித சாக்கடைக்கழிவுகள் ஆகியவற்றை குறைவாக பயன்படுத்தி அல்லது முற்றிலுமாக தவிர்த்து பயிர்சுழற்சி, பசுந்தாள் உரம், மக்கிய இயற்கை உரம், உயரியல் (பூச்சி, நோய் மற்றும் களை) நிர்வாகம் போன்ற இயற்கை சாகுபடி முறைகளை அடிப்படையாக கொண்ட ஒரு வேளாண்மை (விவசாய) முறைமையாகும்.[1] அங்கக வேளாண்மை விளைந்த பொருட்களின் சுகாதாரம், மனிதர்களின் நலம், தரச்சான்றுக்கு மற்றும் விற்பனை ஆகியவற்றைப்பற்றி விவரிக்கிறது.

வரலாறு

கரிம விவசாய இயக்கம் 1930ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் துவங்கியது. 1940ஆம் ஆண்டுகளின் ஆரம்ப காலங்களில் செயற்கை உரங்கள் மீது விவசாயம் அதிக அளவில் சார்ந்திருந்தமைக்கு ஒரு எதிர்ப் போக்காக இது காணப்பட்டது. 18வது நூற்றாண்டில் செயற்கை உரங்கள் உருவாக்கப்பட்டன. முதலில் யூரியாவும் அதன் பிறகு அம்மோனியாவிலிருந்த்து கிடைக்கப் பெற்ற மற்ற உரங்களும், ஹேபர்-பாஸ்ச் முறையைப் பயன்படுத்தி மிகப் பெரும் அளவில் உற்பத்தி செய்யப்பட்டன. மலிவான விலையிலும், எளிதில் இட மாற்றம் செய்யக் கூடியனவாகவும் இருந்ததால் விவசாயிகள் இரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளில் அதிக நாட்டம் காட்டினார்கள்.

சர் ஆல்பர்ட் ஹோவர்ட என்பவர்தாம் கரிம வேளாண்மையின் தந்தையாகக் கருதப்படுகிறார்.அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஜே.ஐ.ரொடேல், மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் லேடி ஈவ் பல்ஃபோர்ட் ஆகியோரும் மற்றும் உலகெங்கும் மேலும் பலரும் இதற்காக மேற்கொண்டு பணிகளைச் செய்தனர்.

பொது மக்களிடையே சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வும், அக்கறையும் அதிகரிக்கவே, தொடக்கத்தில் வழங்குதல்களின் அடிப்படையில் தொடங்கிய இந்த இயக்கம், தேவையின் அடிப்படையிலாக மாறியது. நுகர்வோர் இதற்காக கூடுதல் விலை கொடுக்க முன்வந்தனர். சில சமயங்களில் அரசாங்கம் இதற்காக அளித்த மானியத்தால் கவரப்பட்டு பல விவசாயிகள் இந்த முறைமைக்கு மாறினர். வளர்ந்து வரும் உலக நாடுகளில், கரிம வேளாண்மைத் தரத்திற்கு ஒப்பான, ஆனால் சான்றளிக்கப்படாத, பல மரபுப் படியான முறைமைகள் கொண்டு விவசாயம் செய்கின்றனர். வளரும் நாடுகளில் சில விவசாயிகள் பொருளாதாரக் காரணங்களுக்காக இதற்கு மாறியுள்ளனர்.[2] ஐரோப்பா போன்ற நாடுகளில் இது மிகவும் வேகமாக வளர்ந்து வருவது குறிப்பிடத்த்கதாகும்.

Other Languages
العربية: زراعة عضوية
অসমীয়া: জৈৱিক কৃষি
български: Биоземеделие
हिन्दी: जैविक खेती
Bahasa Indonesia: Pertanian organik
日本語: 有機農業
한국어: 유기농
മലയാളം: ജൈവകൃഷി
Bahasa Melayu: Pertanian organik
မြန်မာဘာသာ: အော်ဂဲနစ်
नेपाली: जैविक खेती
ਪੰਜਾਬੀ: ਜੈਵਿਕ ਖੇਤੀ
srpskohrvatski / српскохрватски: Organska poljoprivreda
Simple English: Organic farms
slovenščina: Ekološko kmetijstvo
српски / srpski: Organska poljoprivreda
Türkçe: Organik tarım
Tiếng Việt: Nông nghiệp hữu cơ
中文: 有機農業
Bân-lâm-gú: Iú-ki lông-gia̍p